அமீரக செய்திகள்

புர்ஜ் கலீஃபா முதல் யாஸ் வாட்டர் பார்க் வரை.. ஆகஸ்ட் இறுதி வரை இலவச அனுமதி அளிக்கும் 9 இடங்கள் இதோ..!!

அமீரகத்தில் கோடை விடுமுறை என்பதால், துபாய் மற்றும் அபுதாபி முழுவதும் ‘கிட்ஸ் கோ ஃப்ரீ’ என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கோடையில் அனைத்து குழந்தைகளும் பல்வேறு சலுகைகள் மூலமாக பூங்காக்கள், பொது இடங்கள், தங்குமிடங்கள் மற்றும் உணவகங்களில் இலவச அணுகலைப் பெறுவதே இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

ஆகவே, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பூங்காக்கள் மற்றும் சாகச இடங்கள் மட்டுமில்லாது உலகின் உயரமான கட்டிடத்தின் உச்சிக்கு சென்று பார்வையிடும் சலுகைகளையும் பெறலாம். இந்த பெரும்பாலான சலுகைகள் அடுத்த மாதம் ஆகஸ்ட் 31க்குள் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், எமிரேட்டில் உள்ள ஒவ்வொரு பொழுதுபோக்கு இடங்களுக்கும் வயது, நேரம், விலக்கப்பட்ட தேதிகள் போன்ற சலுகைகளுக்கான குறிப்பிட்ட சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் உள்ளன. எனவே, முன்பதிவு செய்வதற்கு முன் அவற்றைச் சரிபார்த்துக் கொள்வது சிறந்தது.

துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (Dubai Parks & Resorts):

துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்று, ஜூன் 3 ஆம் தேதி குழந்தைகளுக்கான சலுகைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஜூலை 31 வரை மோஷன்கேட் துபாய், லெகோலாண்ட் துபாய் மற்றும் லெகோலாண்ட் வாட்டர் பார்க் ஆகிய இடங்களில் உற்சாகமூட்டும் ரைடுகள் மற்றும் இடங்களை இலவசமாக அனுபவிக்கலாம்.

தி பாம் – வியூ பாயிண்ட் (The Palm – View Point):

தி பாம்-இன் வியப்பூட்டும் பரந்த காட்சியை அனுபவிக்க குழந்தைகளை அழைத்துச் செல்வது சிறந்த அனுபவமாக இருக்கும். தி பாம் டவரின் 52 ஆம் நிலையில் இருந்து பரந்துவிரிந்த காட்சியை 13 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பார்த்து ரசிக்கலாம். குழந்தை தனியாக வர அனுமதி கிடையாது. பணம் செலுத்தும் வயது வந்தவருடன் குழந்தை வர வேண்டும். இந்தச் சலுகை ஆகஸ்ட் 31 வரை மட்டுமே. மேலும், முன்பதிவு செய்வதற்கு முன் தேதிகளைச் சரிபார்க்கவும்.

புர்ஜ் கலீஃபா (Burj Khalifa):

உலகின் மிக உயரமான கட்டிடத்தின் உச்சியில் இருந்து துபாய் நீரூற்றுடனான இந்த ஐகானிக் கிளிக்கிற்கு, உங்கள் குழந்தைகளை அட் தி டாப் – புர்ஜ் கலீஃபாவுக்கு (At the top – Burj Khalifa) அழைத்துச் செல்லலாம். 12 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் பணம் செலுத்தும் இரண்டு பெரியவர்களுடன் இருந்தால் இலவச அனுமதி உண்டு. இந்தச் சலுகை ஆகஸ்ட் 31 வரை மட்டுமே. குறிப்பாக, முன்பதிவு செய்வதற்கு முன் தேதிகளை சரிபார்க்கவும்.

ஸ்கை வியூஸ் துபாய் (Sky View Dubai):

அதிக உயரம் மற்றும் மிரளவைக்கும் காட்சிகளை பார்க்க விரும்பும் குழந்தைகளாக இருந்தால், ஸ்கை வியூஸ் அப்சர்வேட்டரி சிறந்த இலக்காக இருக்கும். இங்கு அப்சர்வேட்டரி மற்றும் கிளாஸ் ஸ்லைட் போன்றவற்றை சலுகைகளில் அனுபவிக்கலாம். 12 வயதுக்கு குறைவான இரண்டு குழந்தைகள், பணம் செலுத்தும் இரண்டு பெரியவர்களுடன் மதியம் 2 மணி வரை, இலவசமாக ஈர்ப்பை அணுகலாம். இந்த சலுகை ஆகஸ்ட் 31 வரை நீடிக்கும்.

எக்ஸ் ஸ்டிரைக் (Xstrike):

வேடிக்கையான விளையாட்டுகளை விரும்பும் சாகச குழந்தைகளை Xstrike-கிற்கு அழைத்துச் செல்லவும். அங்குள்ள லேசர் டேக் மற்றும் பெயிண்ட்பால் ஆகியவற்றின் வேடிக்கையான உலகங்களை ஒன்றிணைக்கும் அல் குவோஸ் இலக்கில் ஒரு வயது வந்தோருக்கான ஒரு இலவச குழந்தை டிக்கெட்டை பெறுங்கள். இதுவும் ஆகஸ்ட் 31 வரை செல்லுபடியாகும்.

ரீல் சினிமாஸ் (Reel Cinemas):

எமிரேட்டில் திரையாகும் அனைத்து கோடைகால சினிமா வெளியீடுகளையும் உங்களுடன் சேர்ந்து உங்களது 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவச டிக்கெட்டுகளில் கண்டுகளிக்கலாம். இந்த சலுகையை திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணி வரை ரீல் சினிமாஸில் பெற்றுக் கொள்ள முடியும். ஆகஸ்ட் 31 வரை நீடிக்கும் இந்த சலுகைக்கு கட்டணம் செலுத்தும் இரண்டு பெரியவர்களுடன் அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் இலவசமாகச் செல்லலாம்.

யாஸ் வாட்டர் தீம் பார்க் (Yas Water Theme Park):

யாஸ் ஐலண்ட் அபுதாபியில் பங்கேற்கும் ஹோட்டல் ஒன்றில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை நீங்கள் தங்குவதற்கு முன்பதிவு செய்தால், 12 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகள், 2 பணம் செலுத்தும் பெரியவர்களுடன் பெற்றோருடன் முன்பதிவு செய்த அதே அறையில் இலவசமாக தங்கலாம், வரம்பற்ற அணுகலுடன் யாஸ் தீவின் தீம் பார்க்கில் இலவசமாக விளையாடலாம் மற்றும் அதே ஹோட்டல் உணவுத் திட்டத்தில் பெற்றோர்கள்களுடன் இலவசமாக உணவருந்தலாம்.

சீவேர்ல்டு அபுதாபி (Seaworld Abudhabi):

அபுதாபியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான SeaWorld அபுதாபி அனைவரின் விருப்பமான இலக்காக உள்ளது. இந்த பிரச்சாரத்தின் கீழ், 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணம் செலுத்தும் பெரியவர்களுடன் பூங்காவை இலவசமாக அனுபவிக்கலாம். மேலும், நீங்கள் இரண்டு குழந்தைகளுடன் நான்கு பேர் கொண்ட குடும்பமாக இருந்தால், 35க்கும் மேற்பட்ட ஊடாடும் ரைடுகள் மற்றும் ஈர்ப்புகளில் இரண்டு குழந்தைகளுக்கு இலவச அணுகல் கிடைக்கும்.

ஃபெராரி வேர்ல்ட் அபுதாபி (Ferrari World Abudhabi):

குழந்தைகளை அதிரடியான சாகச ரைடுக்கு அழைத்துச் செல்ல விரும்பினால், உலகின் அதிவேக ரோலர் கோஸ்டரின் தாயகமான ஃபெராரி வேர்ல்ட் அபுதாபி சிறந்த இடமாக இருக்கும். இதுவும் இலவச சலுகையில் பங்கேற்கும் இடங்களில் ஒன்றாகும். இந்த சலுகை யாஸ் தீவில் உள்ள ஹோட்டல்களில் தங்குபவர்களுக்கு சலுகையாக வழங்கப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!