ADVERTISEMENT

வளைகுடா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்.. 8.9 மில்லியனை தாண்டிய எண்ணிக்கை.. உலகளவில் அமீரகம் முதல் இடம்..!!

Published: 29 Jul 2023, 7:02 PM |
Updated: 29 Jul 2023, 8:11 PM |
Posted By: admin

உலகளவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடான நம் இந்தியாவிலிருந்து, பெரும்பாலானவர்கள் தங்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்காகவும், சிலர் தங்களின் தொழில் பெருக்கத்திற்காகவும் நாடு விட்டு நாடு சென்று வெவ்வேறு நாடுகளுக்கு சென்று பணிபுரிந்தும் தொழில் செய்தும் வருகின்றனர். அவ்வாறு வேலைக்காகவும், தொழிலுக்காகவும் இந்தியாவிலிருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான இந்திய நாட்டவர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர் என்கிறது புள்ளி விபரங்கள்.

ADVERTISEMENT

இப்படி இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு சென்று வாழும் இந்தியர்களின் தரவுகள் பற்றிய விபரங்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்த பட்டியலில் அதிகமான இந்தியர்கள் வாழும் பகுதிகளில் வளைகுடா நாடுகள் (GCC) மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

அதாவது, சுமார் 8.9 மில்லியன் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வாழ்வதாக அதிகாரப்பூர்வ அரசு புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஓமான், பஹ்ரைன் உள்ளிட்ட ஆறு வளைகுடா நாடுகளில் மட்டும் 66 சதவீதத்திற்கும் அதிகமான NRIக்கள் (Non Resident Indian) உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ADVERTISEMENT

மேலும், உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது தோராயமாக 13.4 மில்லியன் NRIகள் வசிப்பதாகவும், அதில் GCC நாடுகளே மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளதும் புள்ளி விபரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த புள்ளி விபரங்களானது, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், கடந்த மார்ச் 2022 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்த புள்ளி விவரங்கள் துல்லியமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதனடிப்படையில், வளைகுடா நாடுகளில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்திய மக்களின் புள்ளி விவரங்கள் அந்தந்த நாடுகளின் அடிப்படையிலும் தனித்தனியே தெரியவந்துள்ளது. அதில் மற்ற எல்லா நாடுகளை விடவும் அதிக எண்ணிக்கையுடன் அமீரகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த பட்டியல் முறையே கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை,

  • ஐக்கிய அரபு அமீரகம் – 3.41 மில்லியன்
  • சவுதி அரேபியா- 2.59 மில்லியன்
  • குவைத்- 1.02 மில்லியன்
  • கத்தார்- 740,000
  • ஓமன்- 770,000
  • பஹ்ரைன்- 320,000

அத்துடன், வளைகுடா நாடுகள் தவிர மற்ற பிற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முக்கிய இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் பட்டியலும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அந்த நாடுகளின் விபரங்கள்:

  • அமெரிக்கா – 1.28 மில்லியன்
  • இங்கிலாந்து – 350,000
  • ஆஸ்திரேலியா – 240,000
  • மலேசியா – 220,000

இந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, உலகளவில் வளைகுடா நாடுகளிலேயே வெளிநாடுவாழ் இந்தியர்கள் அதிகளவில் பரந்து விரிந்திருப்பது தெரிகிறது. அதற்கு முக்கிய காரணம் வளைகுடா நாடுகளில் பின்பற்றப்படும் தொழிலாளர் சட்டம், தொழிலாளர் உரிமை, தொழிலாளர் நலன் போன்ற சிறப்பம்சங்களாகும்.

இது தவிர, படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என அனைவருக்கும் தகுந்த வேலைவாயப்பு, எளியவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் என அனைவரும் வாழ்வதற்கேற்ற சூழல், நிலைத்தன்மை மற்றும் தன் நாட்டு மக்கள் என்று மட்டும் பாராமல் பிற நாட்டு மக்களின் நலனின் மீதும் அக்கறை கொண்ட இந்நாட்டு தலைவர்கள்  போன்றவையே இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடுகளில் வளைகுடா நாடுகள் முதன்மையாக இருப்பதற்கான காரணங்கள் என்றால் அது மிகையல்ல.