ADVERTISEMENT

அமீரகம் வந்திறங்கிய இந்திய பிரதமர்.. இரு நாட்டு வர்த்தகங்களை உள்ளூர் நாணயங்களில் தீர்க்க ஒப்புதல்..!!

Published: 15 Jul 2023, 4:15 PM |
Updated: 15 Jul 2023, 4:40 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் தலைமையில் இன்று சனிக்கிழமை பிற்பகல் அபுதாபியில் உள்ள கஸ்ர் அல் வதானில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் செய்திருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிகாரப்பூர்வ பயணமாக வந்துள்ளார். மேலும் இந்த அரசுமுறை பயணத்தில் UAE மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமாண்ட வரவேற்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பிரதமர், இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளூர் நாணயங்களில் வர்த்தக தீர்வைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தற்போது, ​​ஐக்கிய அரபு அமீரகமானது எண்ணெயை டாலர்களில் செலுத்துகிறது. ஆனால், உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் நுகர்வோரான இந்தியா உலக வர்த்தகத்தை ரூபாயில் தீர்த்து வைப்பதற்கான கட்டமைப்பை கடந்த ஆண்டு அறிவித்தது. அதனடிப்படையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவை பொறுத்த வரை, இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் கடந்த 10 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. இது குறித்து வெளியாகியிருந்த புள்ளி விபரங்களின் படி, இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமெரிக்க டாலர்களில் 1.41 டிரில்லியனாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT