ADVERTISEMENT

உலகளவில் வெளிநாட்டினருக்கு அதிக சம்பளம் வழங்கும் நாடுகளில் முதலிடம் பிடித்த சவுதி அரேபியா..!!

Published: 30 Jul 2023, 10:22 AM |
Updated: 30 Jul 2023, 10:52 AM |
Posted By: admin

உலகளவில் வெளிநாட்டவர்களுக்கு அதிகம் சம்பளம் வழங்கும் நாடுகள் குறித்த ஆய்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது. ECA இன்டர்நேஷனல் கன்சல்டிங் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவில் சவுதி அரேபியா நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் சராசரி சம்பளம் அதிகம் என்று கருத்துக்கணிப்புகளின் முடிவில் தெரியவந்துள்ளது. அதாவது, ‘Middle Manager’ என்று சொல்லக்கூடிய நடுத்தர மேலாளர்கள் சவுதி அரேபியா நாட்டில் அதிக சம்பளத்தை பெறுவதாக அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

ADVERTISEMENT

My Expatriate Market Pay என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின்படி, உலகளவில் நடுத்தர மேலாளர்களுக்கான ஒரு ஆண்டின் அதிகபட்ச சராசரி சம்பளம் சவூதி அரேபியாவில் $107,000 ஆக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3% சரிவு என்றும், இருப்பினும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது சராசரி சம்பளம் அதிகமாக உள்ளதென்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

மேலும், ஊதியக் கணக்கெடுப்பின் உலகளாவிய தரவரிசையில் ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் முறையே 2, 3 மற்றும் 4 ஆகிய இடங்களை பிடித்துள்ளனர். சவுதி அரேபியாவை பொறுத்தவரை நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் உள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் சவுதி அரேபியாவில் நிலவும் அதிக ஊதியம் காரணமாக இந்தியர்கள் அங்கு பணிபுரிய அதிகம் விரும்புகின்றனர் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. சவுதி அரேபியா நாட்டினை பொருத்தவரை மக்கள் வாழ்வதற்கான வாழ்வாதார செலவு என்பது மிகவும் குறைவாகும். மேலும் தனிநபர் வரி இல்லாததால் அங்கு செலவுகளும் மலிவானவை என்று ECA இன்டர்நேஷனலின் ஊதியம் மற்றும் கொள்கை ஆய்வு மேலாளர் ஆலிவர் பிரவுனின் என்பவர் தெரிவித்துள்ளார்.

எனவே நிறைவான ஊதியமும் அதே சமயம் வாழ்வதற்கான செலவும் குறைவு என்பதாலேயே சவுதி அரேபியாவை மக்கள் தேர்வு செய்ய முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் சம்பளம் அதிகம் இருந்தாலும், சம்பளத்தை விட அங்கு விதிக்கப்படும் வரிகள் மற்றும் மக்களுக்கான வாழ்வாதார செலவுகள் ஆகியவை அதிகமாகும்.

ADVERTISEMENT

ஏனெனில், அங்கு பணிபுரியும் ஒரு வெளிநாட்டவர் செலுத்த வேண்டிய வரி மற்றும் வீட்டுவசதி, வெளிநாட்டுப் பள்ளிகள் மற்றும் பயன்பாடுகள் போன்றவற்றிற்கான செலவுகள் மிக அதிகம் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. அத்துடன் இது போன்ற நாடுகளில் வெளிநாட்டவர்களால் 18 சதவீதம் சம்பளத்தை மட்டுமே சேமிக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.