வளைகுடா செய்திகள்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதுவிதிகளை கொண்டு வந்தது ஓமன் அரசு…வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நாட்டின் முக்கிய சாலைகளில் ட்ரக் செல்ல தடை!!

ஓமானில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, ராயல் ஓமான் காவல்துறையானது (ROP) புது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஓமானின் பல்வேறு கவர்னரேட்டுகளில் உள்ள பல சாலைகளில் டிரக் இயக்கத்தைத் தடை செய்வதற்கான நேரத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் டிரக் இயக்கம் அனுமதிக்கப்படாது என்று ராயல் ஓமான் காவல்துறை அறிவித்துள்ளது.

வியாழன் அன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த தடை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. அவை:

1. மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள முக்கிய சாலைகள்.

2. அல் தகிலியா சாலை-Al Dhakhiliyah Road (மஸ்கட் – பித்பித் பிரிட்ஜ்)

3. அல் பதினா நெடுஞ்சாலை-Al Batinah Highway (மஸ்கட் – ஷினாஸ்.)

அனைத்து டிரக் ஓட்டுநர்களும், தங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பிற்காக மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளுக்கு இணங்குமாறு ROP கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!