ADVERTISEMENT

அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கு இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறை அறிவிப்பு..!!

Published: 13 Jul 2023, 7:55 AM |
Updated: 13 Jul 2023, 8:17 AM |
Posted By: admin

இஸ்லாமிய புத்தாண்டான ஹிஜ்ரி வருட பிறப்பை முன்னிட்டு (1445H) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிகாரபூர்வ விடுமுறை நாட்களை அமீரக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, வரும் ஜூலை 21, 2023 வெள்ளிக்கிழமை அன்று அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஊதியத்திடன் கூடிய விடுமுறையாக இருக்கும் என்று மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது. இதன் மூலம் சில குடியிருப்பாளர்கள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவிப்பார்கள்.

எனினும், சனிக்கிழமை வேலை நாளாக இருப்பவர்களுக்கும், அதே போன்று ஞாயிற்றுக்கிழமை அன்று வேலை நாளாக இருப்பவர்களுக்கும் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக, அமீரகத்தில் உள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கும் ஜூலை 21, 2023 வெள்ளிக்கிழமை அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்கும் என மனிதவள ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மேலும் இந்த விடுமுறையானது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரவை தீர்மானத்தின்படி, பொது மற்றும் தனியார் துறைகளுக்கான 2023 ஆண்டின் அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலின் படி செயல்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT