அமீரக செய்திகள்

இந்திய பிரதமரை வரவேற்று ஹிந்தியில் ட்வீட் செய்த அமீரகத்தின் ஜனாதிபதி.. இரு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

உத்தியோகபூர்வ பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். மேலும் இந்திய பிரதமரை வரவேற்றது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தி மொழியிலும் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட ட்வீட்டில் “இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று அபுதாபிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் இருதரப்பு உறவுகளின் தற்போதைய முன்னேற்றம், நிலையான உலகளாவிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் எங்கள் பகிரப்பட்ட ஆர்வம் மற்றும் நமது நாடுகளுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.” என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த ட்வீட்டில் அரேபிக் மற்றும் ஆங்கில மொழிகளிலும் இந்திய பிரதமரை வரவேற்று பதிவிட்டுள்ளார். அத்துடன் பிரதமர் மோடியை வரவேற்கும் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அபுதாபியில் நடந்த இந்த சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்த ஒப்பந்தங்களானது, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற பரிவர்த்தனைகள் மற்றும் பணம் செலுத்துதல் மற்றும் இந்தியா மற்றும் UAE இடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின் போது, ​​இரு நாடுகளும் உள்ளூர் கரன்சியில் வர்த்தக தீர்வை தொடங்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!