ADVERTISEMENT

அமீரகத்தில் உங்களின் பிறந்தநாளை கேக், பஃபே, தீம் பார்க் என இந்த 5 இடங்களில் இலவசமாக அனுபவிக்கலாம் தெரியுமா.?

Published: 24 Jul 2023, 2:37 PM |
Updated: 24 Jul 2023, 3:08 PM |
Posted By: admin

ஒவ்வொரு வருடமும் நமக்கு மிகவும் பிடித்த ஏதாவது ஒரு நாள் திரும்பி வருகையில் அந்த நாளில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் பிறந்தநாள் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவருக்கும் கொண்டாட்டம் தான். அதிலும் சிலர், பிறந்தநாள் நெருங்கும் போது அதனை தனது நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினர்களுடன் எவ்வாறு கொண்டாடலாம் அல்லது எப்படி அனுபவிக்கலாம் என்று பலவிதமாக திட்டங்களுடன் நாட்களை எண்ணிக் கொண்டு இருப்பார்கள்.

ADVERTISEMENT

அப்படிப்பட்ட உற்சாகமான உங்களின் பிறந்தநாள் அன்று அமீரகத்தில் வசிக்கக்கூடிய நீங்கள், கேக் முதல் தீம் பார்க் வரை கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாகவும், உங்களுடன் வரும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சலுகைகளுடனும் கொண்டாட முடியும் என்றால் நம்ப முடிகிறதா.?

ஆனால் அது உண்மைதான். அமீரகத்தில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து அமீரகத்தின் மிகவும் பிரபலமான வாட்டர் தீம் பார்க், இலவச கேக், இலவச உணவு என உற்சாக அனுபவங்களை இலவசமாக வழங்கும் ஐந்து முக்கிய இடங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

ADVERTISEMENT

1. அட்லாண்டிஸ் அக்வாவென்ச்சர் (Atlantis Aquaventure):

உலகின் மிகப்பெரிய வாட்டர் பார்க்கான தி பாமில் அமைந்துள்ள அட்லாண்டிஸ் அக்வாவென்ச்சரில், 105 ரெக்கார்ட்-பிரேக்கிங் ஸ்லைடுகளை நண்பர்களுக்கான தள்ளுபடி விலைகளில் உங்களது பிறந்தாநாளை நீங்கள் இலவசமாகக் கொண்டாடலாம்.

ADVERTISEMENT

 

இந்த பாஸ் ஆறு நாட்களுக்கு முன்பும், ஒருவரின் பிறந்தநாளுக்குப் பிறகும் செல்லுபடியாகும், உடன் வரும் இரண்டு நண்பர்கள் தங்கள் அக்வாவென்ச்சர் டே பாஸில் 20 சதவீதம் தள்ளுபடி யைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் Aquaventure வருடாந்திர பாஸில் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

2. வைல்ட் வாடி (Wild Wadi):

நீங்கள் புதிய வருடத்திற்குள் செல்லும்போது, Wild Wadiயில் உங்கள் பிறந்தநாளில் 2 UAE ரெசிடென்ட் டிக்கெட்டுகளை வாங்கினால் ஒரு காம்ப்ளிமென்டரி டிக்கெட்டை இலவசமாகப் பெறலாம். UAE குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய இந்தச் சலுகை மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட குழுக்களுக்கு செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. பால் அரேபியா (Paul Arabia):

கேக் இன்றி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நிறைவடையுமா என்ன? நாவிற்கு விருந்தளிப்பது மட்டுமின்றி கண்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் அழகிய டிசைன்களில் உள்ள கேக்கில் இருக்கும் மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தவுடன் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி பெருகும்.

இத்தகைய பிறந்தநாள் கேக்கை பால் அரேபியா இலவசமாக வழங்குகிறது. இதற்கு முதலில் நீங்கள் அவர்களின் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து, தேதியை உறுதிப்படுத்த உங்களது எமிரேட்ஸ் ஐடியை வழங்கலாம். இந்தச் சலுகை உங்கள் பிறந்தநாளிலும் அதற்குப் பிறகு ஏழு நாட்கள் வரையிலும் செல்லுபடியாகும்.

4. வகமமா (Wagamama):

வகமமா உங்கள் பிறந்தநாளில் இலவச மெயின் கோர்ஸை வழங்குகிறது. நீங்கள் மற்ற இடங்களுக்குச் செல்லும் வழியில் விரைவாக சாப்பிட விரும்பினால், விரைவான உணவுக்கு பெயர் பெற்ற ஆசிய உணவகம் பொருத்தமான இடமாக இருக்கும்.

5. BBQ நேஷன்:

உங்களது பிறந்தநாளில் ஸ்பைசியான உணவுகளை ருசிக்க, BBQ நேஷன் உங்களுக்கு முழு பஃபே மற்றும் பிறந்தநாள் கேக்கை இலவசமாக வழங்குகிறது. மேலும், அங்கிருக்கும் ஊழியர்கள் பாட்டுப்பாடி மகிழ்விப்பார்கள்.