ADVERTISEMENT

அனைத்து நாடுகளுக்கும் விமான டிக்கெட்டுகளில் 50% தள்ளுபடி..!! அதிரடி சலுகையை அறிவித்த சவுதியா ஏர்லைன்ஸ்..!!

Published: 19 Aug 2023, 2:00 PM |
Updated: 19 Aug 2023, 2:19 PM |
Posted By: admin

சவுதி அரேபியாவின் (KSA) தேசிய விமான நிறுவனமான Saudi Airlines (Saudia), அனைத்து சர்வதேச இடங்களுக்கும் 50% வரை விமான கட்டணங்களில் தள்ளுபடி அறிவித்துள்ளது. இது சவூதி அரேபியாவை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கும் விமான நிறுவனத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இநம நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த சலுகையானது அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து சவுதி ஏர்லைன்ஸ் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளது, “உங்கள் கனவு இலக்குகள் முன்னெப்போதையும் விட இப்போது நெருக்கமாக உள்ளன. எங்கள் அனைத்து சர்வதேச இடங்களுக்கும் 50% வரை தள்ளுபடி அளிக்கிறோம்” என அறிவித்துள்ளது.

மேலும் தள்ளுபடியானது பிசினஸ் கிளாஸ் மற்றும் எக்கனாமிக் கிளாஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் எனவும், பயணக் காலம் செப்டம்பர் 1, 2023 முதல் நவம்பர் 30, 2023 வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், சவுதி அரேபியாவில் இருந்து செப்டம்பர் 20 முதல் 24 வரை மற்றும் நவம்பர் 15 முதல் 23 வரையிலான தேதிகளில் அனைத்து சர்வதேச இடங்களுக்கும் தள்ளுபடி பொருந்தாது எனவும், மற்ற சர்வதேச நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வருவதற்கு செப்டம்பர் 24 முதல் 27 வரையிலும் , நவம்பர் 24 முதல் 30 வரையிலும் சலுகைகள் பொருந்தாது எனவும் கூறியுள்ளது.

இவை தவிர குறிப்பிடப்பட்ட அனைத்து நாட்களிலும் சலுகைகள் உண்டு என விமான நிறுவனல் அறிவித்துள்ளது. ஒரு வழி, சுற்று பயணம் மற்றும் பல நகரங்களுக்கு என அனைத்து வகையான பயணங்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான கால அவகாசம் 17 ஆகஸ்ட் 2023 முதல் ஆகஸ்ட் 30, 2023 வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்பதிவு செய்யும் போது வழங்கப்படும் அனைத்து டிக்கெட்டுகளும் இரண்டு லக்கேஜ்களை அனுமதிக்கின்றன என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களில் தள்ளுபடி பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு வகுப்பைப் பொறுத்து சலுகை சதவீதம் மாறுபடலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் சவுதி ஏர்லைன்ஸ் இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலம் சலுகைகள் கிடைக்கும். சவுதியாவால் இயக்கப்படும் நேரடி விமானங்களுக்கு மட்டுமே தள்ளுபடி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் விமான டிக்கெட்டில் மாற்றம் ஏதேனும் இருந்தால் அது 17 ஆகஸ்ட் 2023 முதல் ஆகஸ்ட் 30, 2023 வரை அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வழக்கம் போல விமான டிக்கெடுகளில் பின்பற்றப்படும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது தமிழகத்திற்கு இந்த விமான நிறுவனத்தின் சேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்தியாவில் அண்டை மாநிலம் வழியாகவோ அல்லது அமீரகம் போன்று அண்டை நாடுகளில் இருந்து உம்ரா செல்லவிருப்பவர்களுக்கோ அல்லது மற்ற நாடுகளில் இருந்து சவூதிக்கு செல்ல விரும்புபவர்களுக்கோ இந்த சலுகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.