வளைகுடா செய்திகள்

முறையான ஆவணங்கள் இல்லாததால் 63 இலங்கையர்களை நாடு கடத்திய குவைத் அரசு..!!

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அளித்த தகவலின் படி, முறையான ஆவணங்கள் மற்றும் தற்காலிக பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டில் வசிப்பதாக கண்டறியப்பட்ட 62 வெளிநாட்டவர்களை குவைத் அரசு நாடு கடத்தியுள்ளது. இது குறித்து இலங்கையின் உள்ளூர் பத்திரிக்கை வெளியிட்ட செய்திகளின்படி, நாடு கடத்தப்பட்ட நபர்களில் 59 பேர் வீட்டுப் பணியாளர்கள் எனவும், அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குவைத்தில் வீட்டு வேலை செய்த இலங்கை தொழிலாளர்கள் எனவும், அவர்களின் ஒப்பந்தம் முடிக்கப்பட்டு நாட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார். அவர்களில் மேலும் பலர் குவைத்தில் பல்வேறு வேலைகளை மேற்கொண்டதுடன், 250 தினார் மாத சம்பளம் பெற்று, தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வந்தது கண்டறியப்பட்டது.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம், உள்துறை அமைச்சகம், குற்றப் புலனாய்வு துறை, நீதித்துறை அமைப்பு மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சியில், இலங்கையைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கும், தற்காலிக பாஸ்போர்ட்டுகளை வழங்குவதற்கும், பணியமர்த்துவதற்கும் வெற்றிகரமான ஏற்பாடு செய்யப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

குவைத்தின் அல் கபாஸ் என்ற செய்தித்தாள் அளித்த அறிக்கையின்படி, குவைத் நாட்டில் உள்ள 2,000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தங்கள் தாய் நாடான இலங்கைக்குத் திரும்பிச் செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!