ADVERTISEMENT

உலகில் எங்கிருந்தாலும் சரி.. வீட்டில் இருந்தே அபுதாபியை சுற்றிப்பார்க்கலாம்..!! விர்ச்சுவல் ரியாலிட்டி பயணங்களை அறிமுகப்படுத்தும் அபுதாபி..!!

Published: 26 Aug 2023, 7:40 AM |
Updated: 26 Aug 2023, 8:14 AM |
Posted By: admin

அபுதாபியின் முக்கிய சுற்றுலா இடமான யாஸ் ஐலேண்ட், நகரின் அழகிய இடங்களை பார்வையிட விர்ச்சுவல் ரியாலிட்டி பயணங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள பயனர்கள் எமிரேட்டில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு மையங்கள் மற்றும் பிற அடையாள சின்னங்களை டிஜிட்டல் முறையில் ஆராயலாம் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த முன்முயற்சியானது அபுதாபியின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DCT) மற்றும் அல்தார் (Al Dar), மிரல் (Miral), Two Four 54, அபுதாபி மோட்டார்ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் (ADMM) மற்றும் ஃப்ளாஷ் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் யாஸ் ஐலேண்டின் நிர்வாக குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விர்ச்சுவல் அனுபவம் சூப்பர் லீக்கால் (Super League) உருவாக்கப்பட்டதாகவும், இதில் பயனர்கள் அபுதாபியை விர்ச்சுவல் முறையில் சுற்றிப்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விர்ச்சுவல் அனுபவத்தில் பயணிக்கும் சில இடங்கள்:

சீ வேர்ல்ட் அபுதாபி (Seaworld Abudhabi), யாஸ் மெரினா சர்க்யூட் (Yas Marina Circuit), எதிஹாட் பூங்கா (Ettihad Park), அல்தார் சதுக்கம் (Al Dar Square) twofour54 இன் யாஸ் கிரியேட்டிவ் ஹப், லூவ்ரே அபுதாபி (Louvre Abudhabi), மம்ஷா அல் சாதியாத் (Mamzat Al Sadhiyath), சர் பானி யாஸ் தீவு (Sir Baniyas Island), அல் அய்ன் ஒயாசிஸ் (Al Ain Oasis) மற்றும் அல் ஜாஹிலி கோட்டை (Al Jahli Fort) உள்ளிட்ட இடங்களையும், இன்னபிற முக்கிய அபுதாபி அடையாளங்களையும் விர்ச்சுவலாக பார்வையிடலாம்.

அதுமட்டுமின்றி, பயனர்கள் 25 சதுர-கிலோமீட்டர் தூரத்திற்கு விர்ச்சுவல் தளத்தில் பயணிக்க முடியும் என்றும், கூடுதலாக தீம் பார்க் சவாரிகள், யாஸ் தீவில் ரேஸ் கார்களில் ஓட்டுவது மற்றும் மெய்நிகர் வீடுகளை உருவாக்குவது போன்ற சாகசங்களையும் இந்த விர்ச்சுவல் பயணத்தில் அனுபவித்து மகிழலாம்.

ADVERTISEMENT

இது குறித்து DCT அபுதாபியின் மூலோபாய விவகாரங்களின் நிர்வாக இயக்குனர் சையத் அல் ஃபசாரி அவர்கள் பேசுகையில், பார்வையாளர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அங்கிருந்த படியே அபுதாபியை சுற்றிப்பார்க்க முடியும் என்றும், இவ்வாறு விர்ச்சுவல் அனுபவங்களை வழங்குவதன் மூலம் அபுதாபியை புதிய வழியில் உலகத்துடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.