ADVERTISEMENT

ஏர் இந்தியாவின் 4 நாள் அதிரடி விற்பனை.. UAE, GCC, ஐரோப்பா நாடுகளுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி..!!

Published: 18 Aug 2023, 4:41 PM |
Updated: 18 Aug 2023, 5:02 PM |
Posted By: admin

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு மலிவு விலையில் டிக்கெட் கட்டணத்தை வழங்கும் வகையில் மிகப்பெரிய சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகையானது ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 20 ம் தேதி வரையிலான தேதிகளில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த சலுகைகளின் படி, ஏர் இந்தியா விமான முன்பதிவுகளில் எகானமி மற்றும் பிசினஸ் கிளாஸ் ஆகிய இரண்டிலும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடியை பெறலாம் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது. மேலும், ஏர் இந்தியா இணையதளம் மூலம் நேரடியாக முன்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, ​​தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகள் மற்றும் குறிப்பிட்ட நாடுகளில் சிறப்பு தள்ளுபடிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Flying Returns உறுப்பினர்கள் விற்பனைக் காலத்தில் அனைத்து வழிகளிலும் இரண்டு மடங்கு லாயல்டி புள்ளிகளைப் பெறலாம் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐரோப்பா/இங்கிலாந்து, தென்கிழக்கு ஆசியா, UAE, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு, பயணக் காலம் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விற்பனை ஆகஸ்ட் 17, 2023 அன்று 12:01 AM மணிக்குத் தொடங்கி ஆகஸ்ட் 20, 2023 அன்று இரவு 11:59 மணிக்கு நிறைவடைகிறது.

தள்ளுபடியை பற்றிய தெளிவான விவரங்கள் கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
SR.NO. பகுதிகள் எகானமி கேபினுக்கான தள்ளுபடி% பிசினஸ் கேபினுக்கான தள்ளுபடி% பயண காலம்
1 இந்தியாவிற்குள் செயல்படும் விமானங்கள் Upto 15% Upto 15% செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31 வரை
2 இந்தியா TO ஐரோப்பா / UK  (Onward & Return) Upto 30% Upto 5% செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 31 வரை
3 இந்தியாTO சவுத் ஈஸ்ட் ஏசியா (Onward & Return) Upto 10% Upto 10%
4 இந்தியா TO வளைகுடா நாடுகள் (Onward & Return) Upto 10% Upto 10%
5 இந்தியா TO சவுதி அரேபியா (Onward & Return) Upto 15% Upto 15%
6 இந்தியா TO சார்க் நாடுகள்  (Onward & Return) Upto 15% Upto 15% செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31 வரை

அத்துடன், இருக்கைகள் கிடைப்பது குறைவாக இருப்பதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆர்வமுள்ள பயணிகள் தங்களின் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இருப்பினும், குழு முன்பதிவுகளுக்கு விற்பனை கட்டணம் பொருந்தாது என்றும் விமான நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் இந்த சலுகையின் கீழ் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு நிலையான மாற்றம் மற்றும் ரத்துசெய்தல் கட்டணங்கள் பொருந்தும். இந்தச் சலுகையைப் பயன்படுத்த, தனிநபர்கள் ஏர் இந்தியாவின் இ-காமர்ஸ்/மொபைல் ஆப், ஏர் இந்தியா முன்பதிவு அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் தங்கள் முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.