ADVERTISEMENT

துபாயின் முக்கிய சாலை இன்று பகுதியளவு மூடப்படும்..!! RTA அறிவிப்பு..!!

Published: 6 Aug 2023, 7:34 AM |
Updated: 6 Aug 2023, 7:57 AM |
Posted By: admin

துபாயின் அல் மனாரா சாலை இன்டர்செக்‌ஷனில் உள்ள ஜுமேரா ஸ்ட்ரீட்டில் முதல் இரண்டு பாதைகள் பகுதியளவு மூடப்படுவது குறித்து துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி இன்று (ஆகஸ்ட் 6, ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்ட் 7 திங்கள் அதிகாலை 5 மணி வரை சாலை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதியில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குடியிருப்பாளர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், திசை அடையாளங்களைப் (directional signs) பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

ADVERTISEMENT