ADVERTISEMENT

செப்டம்பர் 3ம் தேதியுடன் முடியவிருக்கும் ‘துபாய் சம்மர் சர்ப்ரைஸ்’.. 90% தள்ளுபடியுடன் Final Sale.. ஷாப்பிங் செய்ய ஒரு அற்புத வாய்ப்பு.!!

Published: 30 Aug 2023, 8:06 PM |
Updated: 30 Aug 2023, 8:31 PM |
Posted By: admin

துபாய் சம்மர் சர்ப்ரைஸ் (DSS) இன்னும் சில நாட்களில் முடியிவிருப்பதால் அதன் இறுதி விற்பனையை (Final Sale) மூன்று நாட்களுக்கு நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த மூன்று நாள் விற்பனையில் ஏராளமான பொருள்களை 90 சதவீதத் தள்ளுபடியுடன் வழங்குவதாகவும் DSS அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே ஷாப்பிங் பிரியர்கள் குழந்தைகளுக்கான ஆடை முதல் வீட்டு உபயோகப் பொருட்கள், வாழ்க்கை முறை தயாரிப்புகள் மற்றும் பெரியவர்களுக்கான ஆடைகள் வரை எக்கச்சக்கமானவற்றை தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த அதிரடித் தள்ளுபடி விற்பனை செப்டம்பர் 1 முதல் 3 வரை மட்டுமே நடைபெறும் என்பதால் இந்த வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.

அதுமட்டுமின்றி, DSSஇன் இறுதி விற்பனை கொண்டாட்டத்தில் பிரபலமான பேஷன் ஹவுஸ்கள் பங்கேற்பதால், சில ஃபேஷன் மற்றும் அக்ஸசரிஸ் (fashion and accessory) தயாரிப்புகளுக்கு கூடுதல் தள்ளுபடிகளையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

ADVERTISEMENT

அதேவேளை, பள்ளிகளுக்கு திரும்பும் மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்வதற்கும், ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், விளையாட்டு மற்றும் பல பொருட்களுக்கு பல்வேறு ஸ்டோர்களில் இருந்து தள்ளுபடிகளைப் பெறுவதற்கும் இது அருமையான வாய்ப்பு என்று DSS இன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துபாயில் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தின் போது நடத்தப்படும் துபாய் சம்மர் சர்ப்ரைஸ் விற்பனையின் இந்த ஆண்டிற்கான சீசன், வரும் செப்டம்பர் 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், DSS அதன் இறுதி விற்பனையை தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

DSS வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் ‘DSS Final Sale Big Shopping Huge Wins’ மூலம், ஷாப்பிங் செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் 10,000 திர்ஹம் கிஃப்ட் கார்டை பெறலாம். இது செப்டம்பர் 1 முதல் 3 வரை மாலில் 1,000 திர்ஹம் அல்லது அதற்கு மேல் செலவு செய்பவர்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல, மஜித் அல் ஃபுட்டைம் மால்களில் ஷாப்பிங் செய்பவர்கள் ‘DSS ஷேர் மில்லியனர்’ புரொமோசனில் வெற்றி பெறும் ஐந்து அதிர்ஷ்டகாரர்களில் ஒருவராக மாறலாம். அதாவது, ஒவ்வொருவரும் லாயல்டி புள்ளிகளில் 100,000 திர்ஹம்களுக்கு சமமான வெற்றியைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.