ADVERTISEMENT

செப்டம்பர் 1 முதல் அமல்.. மின் கட்டணங்களை செலுத்தினால் மட்டுமே வெளிநாட்டவர்கள் தாய்நாடு திரும்பலாம்.. அடுத்த நிபந்தனையை விதித்த குவைத் அரசு..!!

Published: 24 Aug 2023, 7:05 PM |
Updated: 24 Aug 2023, 7:18 PM |
Posted By: admin

குவைத் அரசானது நாட்டின் நிதிஇழப்பை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் முன்னர் வாகன விதி மீறல்களுக்கான அபராதங்களை செலுத்திய பின்னரே செல்ல வேண்டும் என்ற அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது.

ADVERTISEMENT

இதன் அடுத்த கட்டமாக மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் போன்றவற்றையும் செலுத்திய பின்னரே சொந்த ஊருக்கு செல்ல முடியும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எனவே நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் பொருட்டு அரசாங்க துறைகள், ஏஜென்சிகளுடன் இணைந்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டு வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறையானது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு  வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து “mew-pay” எனும் ஆன்லைன் தளம், அரசாங்க இ-சேவைகளுக்கான Sahel செயலி அல்லது குவைத் சர்வதேச விமான நிலையத்தின் T-4 முனையத்தில் உள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலகம் மூலம் இந்த கட்டணங்களை செலுத்தலாம் என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

குவைத்தை விட்டு வெளியேறும் முன், வெளிநாட்டு தொழிலாளர்கள், புறப்படும் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல், நிலுவையில் உள்ள அனைத்து போக்குவரத்து அபராதங்களையும் செலுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்தின் கடந்த வார உத்தரவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. வெளிநாட்டவர்கள் தங்கள் போக்குவரத்து தொடர்பான நிலுவைத் தொகையை ஆன்லைனில் அல்லது குவைத்தில் உள்ள போக்குவரத்து துறைகளில் செலுத்தலாம். மேலும், குவைத் சர்வதேச விமான நிலையம் உட்பட பல்வேறு தரை, கடல் மற்றும் வான் எல்லைகளில் கட்டணம் செலுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நுணுக்கமான மதிப்பீட்டானது, ஒவ்வொரு அமைச்சகம் அல்லது நிறுவனத்தில் உள்ள செயல்பாட்டு செயல்முறைகள், கடன் வசூலிப்பதற்கான வழிமுறைகள் உட்பட அனைத்து செயல்முறைகளையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. எனவே, குவைத் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் இறுதியாக நாட்டை விட்டு செல்லும் முன் எல்லா கடன்களையும் செலுத்துவதற்கான, தொழில் நுட்பங்களை அரசு விரிவாக ஆலோசித்து செயல்படுத்தும் முயற்சியில் உறுதியாக இறங்கியுள்ளது.

ADVERTISEMENT