ADVERTISEMENT

பஹ்ரைன்: இந்தியர்கள் தூதரக மற்றும் விசா சேவைகளைப் பெற புதிய மொபைல் ஆப்… இனி அப்பாய்மெண்ட்களை எளிதாக பெறலாம் என தகவல்..!!

Published: 28 Aug 2023, 6:57 PM |
Updated: 28 Aug 2023, 7:11 PM |
Posted By: admin

பஹ்ரைன் நாட்டில் வாழும் இந்திய மக்களின் நலனுக்காக ‘ஓபன் ஹவுஸ்’ ( Open House) எனப்படும் நிகழ்ச்சியானது இந்திய தூதரகத்தால் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சியில், இந்திய தூதரகத்தின் தூதரக குழு மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் பஹ்ரைன் நாட்டில் வாழும் இந்தியர்களின் வசதிக்கேற்ப இந்தி, ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 75க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது பஹ்ரைனில் வசிப்பவர்கள் தூதரகம் மற்றும் விசா சேவைகளை பெறுவதற்கு, புதிய மொபைல் செயலியான ‘EoIBh Connect’ ஐப் பதிவிறக்கம் செய்யுமாறு தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த செயலின் மூலம், இந்திய தூதரகம் மற்றும் IVS குளோபல் ஆகிய இரண்டிலும் சேவைகளை பெறுவதற்கான ஆன்லைன் சந்திப்புகளை செயலியின் மூலமே எளிதாக பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் தூதரகம் இங்கு வாழும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல நேரங்களில் அவசர கால சான்றிதழ்கள் மற்றும் டிக்கெட்டுகள் போன்றவற்றை இந்திய சமூக நல நிதியின் மூலம் பல நேரங்களில் வழங்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல், பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் வீட்டு வேலை செய்யும் இந்திய பெண்களுக்கு, தங்கும் வசதிகள் செய்து கொடுத்து, டிக்கெட்டுகள் பதிவு செய்து நல்ல முறையில் தாய்நாடு திரும்புவதற்கு தூதரகம் உதவி செய்துள்ளது எனவும் இந்நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.