ADVERTISEMENT

UAE: அஜ்மானில் உள்ள ஷாப்பிங் சென்டரில் ஏற்பட்ட தீவிபத்து.. மொத்த இடமும் தீயில் எரிந்து நாசம்..!!

Published: 22 Aug 2023, 5:05 PM |
Updated: 22 Aug 2023, 5:11 PM |
Posted By: admin

அமீரகத்தில் இன்று (ஆகஸ்ட் 22 செவ்வாய்கிழமை) அதிகாலை அஜ்மானில் உள்ள ஷாப்பிங் சென்டரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ADVERTISEMENT

இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் அஜ்மானில் உள்ள சிட்டி ஃபெலாஷ் சென்டரின் கட்டிடம் முற்றிலும் எரிந்து நாசமானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அஜ்மான் மற்றும் பிற அண்டை எமிரேட்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீயானது அடுத்தடுத்த வளாகங்களுக்கு மேலும் பரவாமல் தடுக்க முடிந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீயணைக்கும் முயற்சியில் அஜ்மான், ஷார்ஜா, துபாய் மற்றும் உம்முல் குவைன் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீ பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த தீவிபத்தினால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடனர தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.