வளைகுடா செய்திகள்

கத்தார் நாட்டு மக்களை அண்ணாந்து பார்க்க வைத்த ஆச்சரியம்… புகழ்பெற்ற இரு கோபுரங்களின் உச்சியினை கயிற்றின் மூலம் கடந்து சாதனை படைத்த ரோஸ்.!!

கத்தாரில் புகழ்பெற்ற இரண்டு பெரிய கட்டடங்களுக்கு இடையே கயிற்றின் மூலம் நடந்து தடகள வீரர் ஒருவர் மாபெரும் சாதனை புரிந்துள்ளார். லுசைல் சிட்டியில் உள்ள ராஃபிள்ஸ் தோஹா மற்றும் ஃபேர்மாண்ட் தோஹாவின் இரண்டு உயரமான கோபுரங்களை கடந்தது மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற தடகள வீரர் ஒருவர் தான் ஜான் ராஸ். அவர் கத்தாரின் அடையாளச் சின்னமான 185 மீட்டர் உயரமுள்ள இரண்டு கோபுரங்களுக்கு இடையே உள்ள தூரத்தினை ஒளிரும் கயிற்றின் மூலம் கடக்க முடிவெடுத்து அதனை வெற்றிகரமாகவும் முடித்துள்ளார். இதன் மூலம் உலகிலேயே மிக நீளமான கயிற்றினை கடந்தவர் என்ற பெருமையையும் ஜான் ரோஸ் பெற்றுள்ளார்.

எஸ்டோனிய தடகள வீரரும், ரோப் வாக்கிங்கில் மூன்று முறை உலக சாம்பியனுமான ரோஸ், தனது முதல் முயற்சியிலேயே இந்த அசாதாரண உயரத்தினை கடந்து சவாலை வெற்றிகரமாக முடித்தது அனைவரையும் பெறும் ஆச்சரியத்தில் அழ்த்தியுள்ளது.

தனது சாதனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தடகள வீரர் ரோஸ், இந்த கட்டடங்களை பார்த்த முதல் பார்வையிலேயே இந்த சவாலை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தன் மனதில் தோன்றியதாக அவர் கூறியுள்ளார்.

இரண்டு உயரமான கட்டிடங்களில் ஒன்றான Fairmont Doha உலகின் மிக உயரமான சரவிளக்கைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ராஃபிள்ஸ் தோஹா உலகளவில் பாராட்டப்பட்ட சமையல்காரரான என்ரிகோ கிரிப்பாவின் தனிப்பட்ட ஹோஸ்ட் சேவை மற்றும் சுவையான உணவு வகைகளை வழங்குகிறது.

இந்த இரண்டு கோபுரங்களுக்கு இடையே கட்டப்பட்டிருந்த கயிற்றின் அகலமானது 2.5 செ.மீ.க்கு குறைவானது என்பதும், இரண்டு கோபுரங்களுக்கு இடைப்பட்ட தூரம் 150 மீட்டருக்கும் அதிகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டிடத்தின் உயரத்தில் வீசும் காற்றின் வேகம் மற்றும் கயிற்றில் அமைக்கப்பட்டிருந்த LED விளக்குகளின் வெப்பம் மற்றும் எடை ஆகியவற்றை சமயோசிதமாக கையாண்டு இந்த சாதனையை இவர் வெற்றி கொண்ட விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. முதன்முறையாக கத்தார் நாட்டிற்கு வருகை தந்திருந்த ரோஸின் முதல் முயற்சியே சாதனையாக அமைந்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!