வளைகுடா செய்திகள்

ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே நடைபாதை மீது தாறுமாறாக ஏறிய கார்… ஓட்டுநரை அதிரடியாக கைது செய்த குவைத் போலீஸ்!

குவைத் நாட்டில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை தாறுமாறாக ஓட்டிய நபரினை உடனடியாக கைது செய்து அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். குவைத் நாட்டில் வாகனமானது குடிமக்கள் நடப்பதற்காக சாலையின் ஓரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நடைபாதையின் மீது ஏறி ஓடும் வீடியோவானது ஆன்லைனில் வைரல் ஆகி உள்ளது.

இந்த வீடியோவில் வெள்ளை நிற கார் ஒன்று பாதசாரிகளுக்கான பாதையின் மீது ஏறி செல்லும் பொழுது நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியது. இதனால் இரண்டு கார்களும் நடைபாதையில் இருந்து தடம் புரண்டு சென்றன. இந்நிலையில் காரினை வேண்டுமென்றே நடைபாதையின் மீது செலுத்திய ஓட்டுனரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த நபரிடம் இருந்த வாகனமும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் போலீஸ் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் சாலைகளில் செல்லும் பொழுது கூடுதல் கவனம் தேவை என்றும், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவர்களுக்குரிய ஒதுக்கப்பட்ட பாதையில் செல்ல வேண்டும் எனவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!