அமீரக செய்திகள்

குவைத் நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தை பிடித்த இந்தியர்கள்..!! புள்ளிவிபரங்களை வெளியிட்ட அரசு..!!

குவைத் நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் வீட்டுப் பணியாளர்கள் உட்பட குவைத்தின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஜூலை 2023 இன் இறுதியில் சுமார் 3 மில்லியனாக பதிவாகியுள்ளது. இது கடந்த டிசம்பர் 2022 இன் இறுதியில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.79 மில்லியன் என இருந்தது குறிப்பிடத்தக்கது.

வீட்டுப் பணியாளர்களைத் தவிர்த்து, 2023 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 39,000 ஆக உயர்ந்துள்ளது. இதனடிப்படையில் டிசம்பர் 2022 இன் இறுதியில் 2.036 மில்லியன் என இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஜூலை 2023 இறுதிக்குள் 2.075 மில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குவைத் நாட்டு தொழிலாளர்களை கணக்கில் கொள்ளும் போது ஜூலை 2023 இறுதிக்குள் குவைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 450,000 ஆக உயர்ந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 94 சதவிகிதம் வெளிநாட்டினர் ஆவர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் டிசம்பர் 2022, இறுதியில் 1.594 மில்லியன் ஆக இருந்த வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2023 ஜூலை இறுதிக்குள் 1.633 மில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குவைத்தின் தொழிலாளர் தொகுப்பில் புதிதாக சேருபவர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்திய தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. இதில் சுமார் 877,000 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் அடங்குவர் என்று கூறப்படுகின்றது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக எகிப்தியர்கள், குவைதியர்கள், ஃபிலிப்பைன்ஸ் மற்றும் வங்காளதேச தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!