ADVERTISEMENT

அமீரகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை..!! செப்டம்பர் மாதத்திற்கான விலை பட்டியல் வெளியீடு..!!

Published: 31 Aug 2023, 12:02 PM |
Updated: 31 Aug 2023, 12:04 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது 2023ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. கடந்த இரு மாதங்களாக எரிபொருள் விலையானது முன்னர் இருந்த விலையை விட அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் மாதமும் எரிபொருள் விலையானது சற்று உயர்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எரிபொருள் குழுவின் செப்டம்பர் மாத விலைப்பட்டியலின் படி, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.42 திர்ஹம்சாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை ஆகஸ்ட் மாதத்தில் 3.14 திர்ஹம்சாக இருந்தது.

அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.31 திர்ஹம்சாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை ஆகஸ்ட் மாதம் 3.02 திர்ஹம்சாக இருந்தது.

ADVERTISEMENT

மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 3.23 திர்ஹம்ஸாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2.95 திர்ஹம்சாக ஆகஸ்ட் மாதத்தில் இருந்தது.

அதே சமயம் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.95 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது செப்டம்பர் மாத விலை பட்டியலில் 3.40 திர்ஹம்சாக உயர்த்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT