ADVERTISEMENT

அமீரகத்தில் வங்கி கணக்கு வைத்திருப்பவரா.? இதை அலட்சியப்படுத்தினால் 20,000 திர்ஹம் அபராதம் செலுத்த நேரிடும்.. இ-மெயில் அனுப்பும் அமீரக வங்கிகள்..!!

Published: 30 Aug 2023, 8:39 AM |
Updated: 30 Aug 2023, 9:06 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் குடியிருப்பாளர்களுக்கு, அமீரக அரசின் புதுப்பிக்கப்பட்ட “வரி குடியிருப்பு (Tax Residency)” தொடர்பாக பின்பற்ற வேண்டிய விதிகள் பற்றிய சில முக்கிய தகவல்களை அமீரக வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இ-மெயில் மூலமாக அனுப்பி வருகின்றனர்.

ADVERTISEMENT

அமீரகத்தின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான துபாயை தலைமையிடமாக கொண்ட Emirates NBD வங்கியும், வரி வெளிப்படைத்தன்மை விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறு அதன் வாடிக்கையாளர்களுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளது. அதில், பொதுவான அறிக்கையிடல் தரநிலை (Common Reporting Standard – CRS) எனப்படும் உலகளாவிய வரி வெளிப்படைத்தன்மை முன்முயற்சியின் கீழ் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விவரித்துள்ளது.

தற்போதைய அறிவிப்பின் படி, அமீரகத்தின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (Organisation for Economic Cooperation and Development – OECD) அமைக்கப்பட்டுள்ள நிதி நிறுவனங்கள், தங்களின் வாடிக்கையாளர்களின் வரி குடியிருப்பு (tax residency) எங்குள்ளது என்பதைத் தீர்மானிக்க அவர்கள் பற்றிய துல்லியமான மற்றும் புதுப்பித்த தகவல்களை வைத்திருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, விதிமுறைகளின் ஒரு பகுதியாக வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் Tax ரெசிடென்ஸி பற்றி அறிவிக்க வேண்டும், ஆதார ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் சுய சான்றிதழ் படிவத்தை (self-certification form) நிரப்ப வேண்டும் என எமிரேட்ஸ் NBD வங்கி கூறியுள்ளது. மேலும், இந்த இ-மெயில் அனுப்பிய நாளிலிருந்து 30 நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் Emirates NBD குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் அனைத்து தகவல்களும் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் 20,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் Emirates NBD வங்கி தெரிவித்துள்ளது. UAE நிதி அமைச்சகத்தின் (MoF) வழிகாட்டுதல்களின் படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் விதிமீறல் குறித்து 30 நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சுய சான்றிதழ் என்றால் என்ன?

வங்கிகள் வாடிக்கையாளரின் வரி நிலையைப் (Tax Status) பற்றிய தகவலை சேகரிக்கும் செயல்முறையானது, சுய சான்றிதழ் எனப்படும். அதாவது, வாடிக்கையாளர்கள் புதிய வங்கிக் கணக்கைத் திறந்தால், புதிய நிதித் தயாரிப்புகளில் முதலீடு செய்தால், அல்லது வாடிக்கையாளர் சூழ்நிலையில் மாற்றத்தைக் கண்டால், CRS இன் கீழ் வங்கி பல விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.

இந்த செயல்முறை ‘சுய-சான்றிதழ்’ என்று குறிப்பிடப்படுவதாக எமிரேட்ஸ் NBD வங்கி விளக்கமளித்துள்ளது. அதுமட்டுமின்றி, அமீரகத்தில் வங்கிக் கணக்குகள் மற்றும் அதன் தயாரிப்புகளை வைத்திருந்து நாட்டிற்கு வெளியே வசிக்கும் நபர்களை வங்கிகள் அடையாளம் காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.