ADVERTISEMENT

கத்தார்: வெளிநாட்டவர்கள் உட்பட சிலருக்கு கட்டாய மருத்துவ காப்பீட்டில் இருந்து விலக்கு.. இலவச மருத்துவ சிகிச்சை.. யார் யாருக்கெல்லாம் பொருந்தும்.?

Published: 3 Sep 2023, 7:45 PM |
Updated: 3 Sep 2023, 7:59 PM |
Posted By: admin

கத்தார் அரசின் பொது சுகாதார அமைச்சகம், கட்டாய மருத்துவக் காப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கூடுதலாக, சில பிரிவினர் அரசாங்க சுகாதார மையங்களில் இலவச சுகாதார சேவைகளை பெற உரிமையுள்ளவர்கள் எனவும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் எண் அமைச்சரவை தீர்மானமானது பின்வரும் பிரிவினருக்கு கட்டாய மருத்துவக் காப்பீட்டிலிருந்து விலக்கு அளித்துள்ளது. அது யார் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது பற்றிய விபரங்களை கீழே காணலாம்.

  • கத்தார் நாட்டினரை திருமணம் செய்த கத்தாரி அல்லாத பெண்கள்.
  • ஒரு கத்தார் குடிமகனின் குடும்பத்தில் பணிபுரியும் நான்கு வீட்டுப் பணியாளர்கள்.
  • வெளிநாட்டு தூதர்கள் (Diplomat) மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் அவர்களது பதினாறு வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
  • கத்தாரி அல்லாத வெளிநாட்டவர்களை திருமணம் செய்து கொண்ட கத்தார் நாட்டு பெண்களின் குழந்தைகள்.
  • சிறைக்கைதிகள்.
  • கத்தார் விமான நிலையம் வழியாக பயணிக்கும் அனைத்து ட்ரான்சிட் பயணிகள்.
  • கத்தாரி அல்லாத அல்லது கத்தார் குடிமகன்களிடம் இருந்து விவாகரத்து செய்யப்பட்ட விதவை பெண்கள்.
  • தற்காலிக குடியிருப்பு அனுமதி (temporary residence permit) வைத்திருப்பவர்கள்.
  • பராமரிப்பு இல்லங்களில் வாழும் ஆதரவற்றவர்கள்.
  • தந்தையால் கைவிடப்பட்ட குழந்தைகள்.
  • தற்காலிக நுழைவு (temporary entry) அனுமதி கொண்ட வெளிநாட்டுப் பயணிகள்.
  • நாட்டிற்குள் நுழைந்த 30 நாட்கள் ஆன்-அரைவல் விசாவைக் கொண்ட சுற்றுலாவாசிகள்.

கத்தார் அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, மேலே கூறப்பட்ட வகைகளின் கீழ் வரும் கத்தார் நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த நபர்கள், மருத்துவ காப்பீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோன்று, 2023 ஆம் ஆண்டின் அமைச்சரவை முடிவு எண் (10) கத்தார் நாட்டினருக்கு அரசாங்க சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சுகாதார சேவைகளின் வரம்பிற்குள், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசாங்க சுகாதார மையங்களில் இலவச சுகாதார சேவைகள் வழங்கப்படும் என்றும் கத்தாரின் பொது சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அவர்களின் பட்டியலை கீழே காணலாம்.

  • கத்தார் நாட்டினரை திருமணம் செய்து கொண்ட கத்தாரி அல்லாத பெண்கள்.
  • தற்காலிக குடியிருப்பு அனுமதி வைத்திருப்பவர்கள்.
  • கத்தார் அல்லாதவர்களை திருமணம் செய்து கொண்ட கத்தாரி பெண்களின் குழந்தைகள்.
  • பராமரிப்பு இல்லங்களில் உள்ள ஆதரவற்றவர்கள். 
  • கத்தார் அல்லாத விதவைகள் அல்லது கத்தார் குடிமக்களிடம் இருந்து விவாகரத்து செய்யப்பட்ட வேறு நாட்டைச் சேர்ந்த பெண்கள்.
  • தந்தை யாரென்று தெரியாத குழந்தைகள்.