ADVERTISEMENT

Oct 16 முதல் துபாயில் மூன்று நாட்களுக்கு CBBC பிராண்ட் சேல்!! அனுமதி இலவசம்.. முன்னணி பிராண்டுகளுக்கு 85% வரை தள்ளுபடி..!!

Published: 13 Oct 2023, 6:56 PM |
Updated: 13 Oct 2023, 7:03 PM |
Posted By: admin

அமீரகம் மற்றும் துபாய் குடியிருப்பாளர்களுக்கு ஆண்டுதோரும் எண்ணற்ற தள்ளுபடி விற்பனைகளை வழங்கும் CBBC ஷாப்பிங் திருவிழா எதிர்வரும் அக்டோபர் 16 ம் தேதி தொடங்கவிருப்பதாக CBBC நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரம்மாண்டமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கவுள்ள இந்த தள்ளுபடி விற்பனை 16 ம் தேதி முதல் 18 ம் தேதி   வரை என மூன்று நாட்களுக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரேடிசன் ப்ளூ ஹோட்டல் தேராவில் (Radisson Blu Hotel Deira) ஜபீல் பால்ரூமில் (Zabeel Ballroom) நடைபெற உள்ள இந்த மூன்று நாள் விற்பனையில், எண்ணற்ற பிராண்டுகளுக்கு 85% வரை தள்ளுபடியை அனுபவிக்கலாம் என்றும் CBBC நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்த மூன்று நாள் தள்ளுபடி விற்பனையில் அனைவருக்கும் நுழைவு இலவசம் என்பதால், வாடிக்கையாளர்கள் காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடைபெறும் விற்பனையில் ஏராளமான பிராண்டுகளை தள்ளுபடி விலையில் ஷாப்பிங் செய்து அனுபவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், ஃபேஷன் தயாரிப்புகள் மற்றும் அணிகலன்கள் முதல் கடிகாரங்கள் வரை சுமார் 300 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பிராண்டுகளுடன் வாடிக்கையாளர்களுக்கு இது மறக்க முடியாத ஷாப்பிங் அனுபவத்தை தரும் என்றும் CBBC நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

குறிப்பாக, லாகோஸ்ட், ஃபிலா, மோன்ட் பிளாங்க், அர்மானி, அடிடாஸ், டாம் ஃபோர்டு, ரேபான், CK, ஆக்ஸிலி, லைஃப் ஸ்டைல், ஷீன், கெஸ், மைக்கேல் கோர்ஸ், கோச், ராபர்டோ கவாலி, ஸ்பிரிங்ஃபீல்ட் உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளின் வரிசையும் இந்த தள்ளுபடி விற்பனையில் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், அதிரடி விற்பனையின் காலம் மிகக் குறைவாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் பெறப்போகும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் உண்மையிலேயே அவர்களை ஆச்சரியப்படுத்தும் என்றும், அத்தகைய டீல்களை அவர்கள் துபாயில் வேறு எங்கும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel