ADVERTISEMENT

ஈரானில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்கள்..!! அதிர்வுகளை உணர்ந்த அமீரக குடியிருப்பாளர்கள்..!!

Published: 17 Oct 2023, 1:26 PM |
Updated: 17 Oct 2023, 1:31 PM |
Posted By: admin

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் தெற்கு பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக நேரப்படி காலை 8.59 மணியளவில், தெற்கு ஈரானில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. அதன் பின் காலை 9.10 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் 6.0 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதன் நில அதிர்வுகளை அமீரகத்தில் வசிப்பவர்களும் உணர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது மீண்டும் ஈரானில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமீரகத்தில் இன்று பகலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து NCM வெளியிட்ட பதிவில் “ஈரானில் மூன்றாவது முறையாக மதியம் 12:22 மணிக்கு NCM மற்றொரு 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது மற்றும் இது வடக்கில் உள்ள ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களால் உணரப்பட்டது. இந்த நில அதிர்வுகள் அமீரகத்தில் வசிப்பவர்களால் லேசாக உணரப்பட்டது” என வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், நிலநடுக்கங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் உணரப்பட்டதாகவும் NCM தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீ்ரகம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று நடுக்கங்களை பதிவு செய்தாலும், நாடு நில அதிர்வு மண்டலத்தில் இல்லாததால் அவை குடியிருப்பாளர்களால் அரிதாகவே உணரப்படுகின்றன. நில அதிர்வுகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் இது நாட்டின் கட்டிடங்கள் அல்லது உள்கட்டமைப்பை பாதிக்காது என ஏற்கெனவே அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT