அமீரக செய்திகள்

துபாய்: புர்ஜ் கலீஃபாவில் வானவேடிக்கை மற்றும் லேசர் ஷோ எப்படி நிகழ்த்தப்படுகிறது? தெரியுமா உங்களுக்கு.?

உலகப்புகழ் பெற்ற மற்றும் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, ஒவ்வொரு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் வண்ணமயமான லேசர் விளக்குகளாலும் மற்றும்  வானத்தை அலங்கரிக்கும் வானவேடிக்கைகளாலும் புத்தாண்டு இரவை கொண்டாடும் என்பது உலகமே அறிந்த ஒன்றாகும்.

அதேபோன்று இந்த ஆண்டும் புர்ஜ் கலீஃபா புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன், புத்தாண்டு ஈவ்னிங் 2024 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் எப்படி வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படுகின்றது என்பது பற்றிய விபரங்களையும் Emaar Properties ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, புர்ஜ் கலீஃபாவின் முகப்பில் உள்ள மிகப்பெரிய திரையானது தொலைநோக்கு பார்வையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் குழுவினரால் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டதாகவும், இதற்கு 600 வேலை நாட்களுக்கு மேல் ஆனதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தாண்டு நிகழ்ச்சியில் 325 துப்பாக்கி சூடு நிலைகள் (பட்டாசு வெடிக்கும் நிகழ்வு) வானத்தில் மூச்சடைக்கக்கூடிய வகையில் புகைமண்டல காட்சியை உருவாக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து திசைகளிலும் கிட்டத்தட்ட 2,800 க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வெடிக்கும் பட்டாசுகள், துபாயின் இரவு வானத்தை வண்ணங்கள் மற்றும் வடிவங்களினால் அலங்கரிக்கும். இதில் 15,682 பைரோடெக்னிக் கூறுகள் இடம்பெறும் என்றும், ஒவ்வொன்றும் அதிநவீன கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைக்கப்பட்ட தனித்துவமான பட்டாசு வெடிப்பின் வரிசையைக் கொண்டிருக்கும்.

இவற்றுடன் துபாய் நீரூற்று (Dubai Fountain) புர்ஜ் கலீஃபாவின் காட்சியுடன் ஒத்திசைந்து, நீர் கலைத்திறன், ஒளி மற்றும் ஒலி ஆகியவற்றின் பிரமிக்க வைக்கும் கலவையை வழங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 6,600 க்கும் மேற்பட்ட விளக்குகள் மற்றும் 127 ஸ்ட்ரோப் சரங்கள் நீரை ஒளிரச் செய்யும் மற்றும் 6,700 மூடுபனி முனைகள் (fog nozzles) ஒரு அற்புதமான சூழ்நிலையை உருவாக்கும்.

புர்ஜ் பார்க்கில் இருந்து பிரத்யேகமாக வாணவேடிக்கைக் காட்சிகளைப் பார்க்க விரும்புபவர்களுக்கு Emaar Properties கட்டண டிக்கெட்டுகளையும் அறிவித்துள்ளது. மேலும் டவுன்டவுன் துபாய் பகுதியில் அமைந்துள்ள மற்ற இடங்களிலிருந்தும் நீங்கள் அவற்றை இலவசமாக கண்டுகளிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!