ADVERTISEMENT

மலேசியா செல்ல இனி விசா தேவையில்லை.. விசா இல்லாமல் இந்தியர்கள் பயணிக்க சிறந்த 30 நாடுகளின் பட்டியல் இதோ..!!

Published: 28 Nov 2023, 11:22 AM |
Updated: 28 Nov 2023, 11:36 AM |
Posted By: admin

இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் அதிகளவில் வசிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் மலேசியாவிற்கு, இந்திய மற்றும் சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் முடிவை மலேசிய அரசு நேற்று அறிவித்துள்ளது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்களின் தலைமையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவின் மூலம், இனி இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 1 முதல் விசா இல்லாமலேயே மலேசியாவிற்கு பயணம் செய்யலாம்.

ADVERTISEMENT

தற்போது வரையிலும், ​​இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு சுற்றுலா செல்ல இ-விசாவிற்கு கிட்டத்தட்ட 170 திர்ஹம்ஸ் (3,799 ரூபாய்) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த அறிவிப்பின் மூலம் இந்திய பயணிகள் இனி விசா இல்லாமலேயே பயணித்து, 30 நாட்கள் வரையிலும் மலேசியாவில் தங்கியிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா துறையை பொருத்தவரையிலும் இந்தியாவும், சீனாவும் மலேசியாவிற்கு இரண்டு மிகப் பெரிய சந்தைகள் என்பதால், இந்த இரு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் இந்த விசா இல்லாத நுழைவு திட்டத்தை மலேசிய அரசு செயல்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

எனவே, பார்வையாளர்கள் ஆசியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் மலேசியாவிற்கு இதன் மூலம் எளிதான மற்றும் தடையற்ற பயணத்தை அனுபவிக்கலாம். அதேபோன்று தற்போதைய நிலவரப்படி, இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளும் இந்தியர்களுக்கு விசா இல்லாத அனுமதியை வழங்கியுள்ளதாக டிராவல் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதால், UAE மற்றும் GCC நாடுகளில் வசிக்கக்கூடிய இந்திய குடியிருப்பாளர்களும் இனி மலேசியாவிற்கு சுற்றுலா செல்ல அல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களை காண விசாவிற்கு விண்ணப்பித்து காத்திருக்க தேவையின்றி இனி எளிதாக பயணிக்க முடியும்.

ADVERTISEMENT

இதன் மூலம், மலேசியா தவிர்த்து ஓமான், கத்தார், இலங்கை, தாய்லாந்து, கஜகஸ்தான், அல்பேனியா, மொரிஷியஸ், பார்படாஸ், மொன்செராட், பூட்டான், நேபாளம், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், நியு, குக் தீவுகள், டொமினிகா, எல் சால்வடார், செனகல், பிஜி, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், கிரெனடா, செயின்ட் வின்சென்ட், கிரெனடைன்ஸ், ஹைட்டி, ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துனிசியா, மக்காவோ (SAR சீனா), மைக்ரோனேஷியா, வனுவாடு, வியட்நாம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel