அமீரக செய்திகள்

அபுதாபியில் தொடங்கிய லைட் ஆர்ட் கண்காட்சி ‘மனார் அபுதாபி’.. ஒளிவெள்ளத்தில் ஜொலிக்கும் கடற்கரைகள் மற்றும் தீவுகள்..!!

அபுதாபியின் கடற்கரைகள், தீவுகள் மற்றும் சதுப்புநிலங்கள் என பல முக்கிய இடங்கள் அனைத்தையும் நார்த்தர்ன் லைட்ஸ் (Northern Lights) அல்லது அரோரா பொரியாலிஸ் (aurora borealis) போன்று வண்ண விளக்குகளால் ஒளியூட்டும் ‘மனார் அபுதாபி’ என்ற லைட் ஆர்ட் கண்காட்சியானது தொடங்கப்பட்டுள்ளது.

கிரவுண்டிங் லைட் (Grounding Light)’ என்ற கருப்பொருளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த மனார் அபுதாபி கண்காட்சி (Manar Abu Dhabi exhibition), அர்ஜென்டினா, தைவான், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், மெக்சிகோ, பாலஸ்தீனம், சவுதி அரேபியா, துனிசியா, UAE, UK மற்றும் US ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச கலைஞர்களின் பிரம்மிப்பூட்டும் கலைப்படைப்புகளைக் கொண்டுள்ளது.

ஜிம் டெனிவன் என்ற கலைஞர் ஃபாஹித் தீவில் 432 சூரிய விளக்குகளால் (solar lanterns) ஒளிரும் ஒரு நினைவுச்சின்ன நிலக் கலை நிறுவலான Self Similar ஐ உருவாக்கியுள்ளார். அதேபோல், 10 பெரிய அளவிலான ஆடியோவிஷுவல் மல்டிமீடியா கலைப்படைப்புகளின் ஊடாடும் பயணமான டிரான்ஸ்லேஷன் தீவுடன் லுலு தீவை ரஃபேல் லோசானோ-ஹெம்மர் என்பவர் உருவாக்கியுள்ளார்.

மனார் அபுதாபி லைட் ஆர்ட் கண்காட்சி – படம் 1

இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சில நிறுவல்கள் இயற்கை மற்றும் அண்ட நிகழ்வுகளை பிரதிநிதித்துவப்படுத்த அல்லது தொடர்பு கொள்ள ஒளியைப் பயன்படுத்துகின்றன. மற்ற சில நிறுவல்கள் இருப்பு, மனித புரிதல் மற்றும் தவறான புரிதலின் நிலையற்ற தன்மையையும் பிரதிபலிக்கின்றன.

மனார் அபுதாபி லைட் ஆர்ட் கண்காட்சி – படம் 2

குறிப்பாக, கார்னிச் கடற்கரையில் கார்ஸ்டன் ஹோல்லர் என்பவர் பார்வையாளர்கள் பங்கேற்கும் வகையில், அபுதாபி டாட்ஸுடன் ஒரு கேமை உருவாக்கியிருக்கிறார். இது பார்வையாளர்களை ஒளியுடன் தொடர்பு கொள்ளவும் அதன் பண்புகளை மாற்றவும் அனுமதிக்கிறது.

மனார் அபுதாபி லைட் ஆர்ட் கண்காட்சி – படம் 3

ஒருபுறம் பயோலுமினசென்ட் ஒளியில் அபுதாபி கடற்கரைகள் மிளிரும் வேளையில், மற்றொரு பக்கம் அழிந்து வரும் அக்ரோபோரா பவள இனங்களை முன்னிலைப்படுத்தும் விதமாக கார்னிச் கடற்கரையில் ஷெசாத் தாவூதின் நான்கு மீட்டர் உயரமுள்ள iridescent Coral Alchemy (Acropora Grove) சிற்பம் அமைந்துள்ளது.

மனார் அபுதாபி லைட் ஆர்ட் கண்காட்சி – படம் 4

நுஜூம் அல் கானெம் என்பவர் லுலு ஐலேண்டில் பெரிய அளவிலான தோவ் படகுகளை நிறுவியுள்ளார், மேலும் அஹ்மத் அல் அரீஃப் என்பவர் அபுதாபி நிலப்பரப்பின் பரிமாணங்களை அபுதாபி சேம்பர் கட்டிடத்தில் தனது வீடியோ ப்ரொஜெக்ஷனில் படம்பிடித்துள்ளார்.

மனார் அபுதாபி லைட் ஆர்ட் கண்காட்சி – படம் 5

இவற்றுடன் குரூப் F இன் ட்ரோன் மற்றும் லைட் பெயிண்டிங் ஷோக்கள் இரவு வானத்தை மாற்றியமைத்து, சாதியத் ஐலேண்டின் முக்கிய கட்டிடக்கலை எதிர்காலத்தை காட்சிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

மனார் அபுதாபி லைட் ஆர்ட் கண்காட்சி – படம் 6

இத்தகைய கலை நிறுவல்கள் மற்றும் ஒளிக் கண்காட்சிளுடன் பார்வையாளர்களுக்கு பொது பேச்சுகள், ஒர்க் ஷாப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளின் அட்டவணை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த முயற்சிகள், கலை மூலம் எமிரேட்டின் பொது இடங்களை மேம்படுத்தும் Public Art Abu Dhabiயின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!