ADVERTISEMENT

துபாயில் புதிய டோல்கேட்களை நிறுவ Salik திட்டம்.. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை..!!

Published: 8 Nov 2023, 12:33 PM |
Updated: 8 Nov 2023, 12:34 PM |
Posted By: admin

துபாயில் தினசரி போக்குவரத்து அதிகரித்து வருவதால், அதை நிர்வகிக்க கூடுதலாக புதிய சாலிக் டோல் கேட்களின் தேவை இருப்பதாக சாலிக் நிறுவனத்தின் CEO இப்ராஹிம் அல் ஹதாத் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய சுங்கச் சாவடிகளை நிறுவுவதற்கான முடிவு துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்திடம் (RTA) உள்ளதாகவும், துபாயின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தவுடன் நாங்கள் புதிய சாலிக் கேட்களை செயல்படுத்துவோம் என்றும் அல் ஹதாத் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், துபாயில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருவதால், புதிய சாலிக் கேட்கள் நிறுவுவது தொடர்பாக RTA உடன் கலந்துரையாடல் நடந்து வருவதாகவும், இது குறித்து அரசாங்கம் இறுதி முடிவெடுக்கும் என்றும் அல் ஹதாத் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

சாலிக் கேட்கள்:

துபாயில் போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக RTA ஆனது, கடந்த 2007ம் ஆண்டில் டோல் கேட்களை துபாயின் முக்கிய சாலைகளில் அறிமுகப்படுத்தியது. அத்துடன் அரசாங்கத்திற்கு புதிய வருவாய் ஆதாரங்களை அதிகரிக்க நகரின் முக்கிய வழித்தடங்களில், குறிப்பாக ஷேக் சயீத் சாலையில் எட்டு சுங்கச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் இந்த சாலிக் டோல்கேட்களின் வழியாக 293 மில்லியன் பயணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2022இன் இதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையை விட 9.8 சதவீதம் அதிகம் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சாலிக் டோல்கேட் வழியாகப் பயணிப்பதற்கு ஒவ்வொரு பயணத்திற்கும் நான்கு திர்ஹம் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

சாலிக் கேட்களில் விளம்பரம்:

துபாயில் உள்ள வலுவான விளம்பர ஆபரேட்டர்களில் ஒருவருடன் நீண்ட கால ஒத்துழைப்பை ஏற்படுத்தி, டோல்கேட்டில் உள்ள கண்ணாடி திரைகளில் புதிய வணிகங்களை விளம்பரம் செய்வதன் மூலம் சாலிக் கேட்கள் வழியாகச் செல்லும் போக்குவரத்தில் இருந்து வருவாய் ஈட்டும் திட்டத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டோல் கேட்களில் சோலார் பேனல்கள்:

துபாயில் முதல் கட்டமாக ஜெபல் அலியில் உள்ள சாலிக் கேட்டில் 15 சதவீத ஆற்றலை வழங்கும் சோலார் பேனல்களை நிறுவியுள்ளதாகவும், இந்த அமைப்பை தற்போதுள்ள மற்ற டோல்கேட் மற்றும் பிற எதிர்கால டோல்கேட்களுக்கு விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாகவும் அல் ஹதாத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel