அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்றும் மழை பெய்யும்!! 5 மணி வரை மழையை எதிர்பார்க்கலாம் என NCM தகவல்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான எமிரேட்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) கனமழை பதிவாகியுள்ள நிலையில், இன்றும் மழை தொடரும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது.

குறிப்பாக, இன்றைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், தீவுகள் மற்றும் சில கடலோரப் பகுதிகளில் மழையை உருவாக்கக்கூடிய வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என்பதால் மழை பெய்யும் என்றும் NCM கூறியுள்ளது.

NCM வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பின் படி, குடியிருப்பாளர்கள் இன்று மாலை 5 மணி வரை மழையை எதிர்பார்க்கலாம். ஆகவே, NCM மழையால் பாதிக்கப்படும் பல்வேறு பகுதிகளுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

மேலும், துபாயில் நேற்று போலவே இன்றும் அதிகாலை முதலே மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

அத்துடன் இன்று இரவு வானிலை ஈரப்பதமாகவும், சில மேற்குப் பகுதிகளில் மூடுபனி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது, லேசானது முதல் மிதமான காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், சில நேரங்களில் தூசி மற்றும் மணலுடன் கூடிய காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக நாட்டின் மலைப்பகுதிகளில் 13ºC வரை குறையும் மற்றும் அதிகபட்சமாக உள் பகுதிகளில் 32ºC வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!