ADVERTISEMENT

மீண்டும் செயல்பட துவங்கிய சென்னை விமான நிலையம்..!! குறிப்பிட்ட விமான சேவைகள் ரத்து..!!

Published: 5 Dec 2023, 10:49 AM |
Updated: 5 Dec 2023, 11:51 AM |
Posted By: admin

 வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ‘மிக்ஜாம் (michuang cyclone)புயலின் காரணமாக கடந்த இரு தினங்களாக சென்னையில் பலத்த மழை பெய்து வந்ததுடன் சென்னையின் மெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியிருந்தன. இன்று புயல் சென்னையை விட்டு நகர்ந்துள்ளதால் சென்னையில் மழை குறைந்து வெள்ள நீர் வடிந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்திலும் வெள்ளநீர் சூழ்ந்ததால் விமான நிலையம் தற்காலிகமாக நேற்று முழுவதும் மூடப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது இன்று காலை 9 மணி முதல் விமான நிலையம் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. இருப்பினும் எப்போதும் போல் அல்லாமல் குறிப்பிட்ட சில விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பல பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பலர் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் திருப்பி விடப்பட்டதன் காரணமாக தமிழகத்தின் மற்ற விமான நிலையங்கள் நேற்று மிகவும் பரபரப்பாக செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT