ADVERTISEMENT

அமீரக பாலைவனத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்தியர்.. கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்..!!

Published: 24 Jan 2024, 7:39 AM |
Updated: 24 Jan 2024, 7:42 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் சில மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தியவை சேர்ந்த அமீரக குடியிருப்பாளரின் உடல் சில நாட்களுக்கு முன்பு சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், உள்ளூர் நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு நேற்று விமானம் மூலம் தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களின் படி, பல ஆண்டுகளாக அமீரகத்தின் உள்ளூர் ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த அனில் குமார் வின்சென்ட் என்பவர் இந்த மாத தொடக்கத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 12ம் தேதி அன்று சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

59 வயதான அனில்குமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தில் PRO ஆக பணிபுரிந்ததாகத் தெரிவித்த இந்திய சமூக சேவகர் நசீர் வடனப்பள்ளி, ஜனவரி 2 ஆம் தேதி ராஸ் அல் கோரில் உள்ள நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றை ஆய்வு செய்யும்படி நிறுவனத்தின் சார்பாக கேட்கப்பட்டதாகவும் அதன் பிறகு அவர் காணாமல் போனதாகவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், அனிலின் சகோதரர் அதே நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிவதாகவும், அந்த சமயத்தில் அவரைத் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்ததாகவும் நசீர் கூறியுள்ளார். இதையடுத்து துபாய்க்கு வந்த அனிலின் மகன், தந்தையை தேடிப்பார்த்தும் பலன் இல்லாததால், இரண்டு நாட்களுக்கு பிறகு, அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காணாமல் போன அனில்குமாரை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டதும், இறுதியாக ஜனவரி 12 அன்று ஷார்ஜாவில் உள்ள ஒரு தொலைதூர பாலைவனத்தில் அவரது உடல் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் உடலை அடையாளம் காண குடும்பத்தினர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நசீர் கூறியுள்ளார். இது குறித்து நசீர் விவரிக்கையில், ஒரு சண்டையில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சார்பாக குடும்பத்தினரிடம் கூறப்பட்டதாகவும், இந்த குற்றச் செயல் தொடர்பில் இன்னும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வழக்கு இப்போது விசாரணையில் இருப்பதாகத் தெரிவித்த நசீர், இது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும், கழுத்தை நெரித்து மார்பில் அழுத்தியது மரணத்திற்கான காரணம் என்று எம்பாமிங் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். உயரிழந்த அனில்குமாருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel