ADVERTISEMENT

ஜப்பான்: ஓடுபாதையில் சென்ற விமானத்தில் தீ பிடித்து விபத்து.. 367 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல்..!!

Published: 2 Jan 2024, 1:57 PM |
Updated: 2 Jan 2024, 1:59 PM |
Posted By: admin

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) தீப்பிடித்து எரிந்ததாக தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்பட்டுள்ளது. NHK என்ற ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்ட படங்கள், விமானம் ஓடுபாதையில் விறுவிறுப்பாக நகர்வதையும் அதற்குக் கீழே இருந்து ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் வெளியானதையும் காட்டுகிறது.

ADVERTISEMENT

இந்த சம்பவத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் ஏர்பஸ் கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதாக தொலைக்காட்சி அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

ஜப்பான் ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஹொக்கைடோவில் உள்ள ஷின்-சிட்டோஸ் விமான நிலையத்தில் இருந்து வந்த இந்த விமானம் 300-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

மீட்புப் பணியாளர்கள் தீயை அணைக்க முயன்ற போது விமானத்தின் ​​​​ஜன்னலிலிருந்து தீப்பிழம்புகள் வெளியே வருவது புகைப்படங்களில் தெரிந்துள்ளது. அத்துடன்  ஓடுபாதையிலும் குப்பைகள் எரிந்து கொண்டிருந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த சம்பவமானது அந்த விமான நிலையத்தில் இருக்கும் அனைவருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT