அமீரக செய்திகள்

துபாய்: புத்தாண்டிற்காக ஒரே நாளில் பொது போக்குவரத்தை பயன்படுத்திய 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்..!! RTA தகவல்..!!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துபாயில் நேற்று (டிசம்பர் 31, 2023) சுமார் 2 மில்லியன் பயணிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவிக்கையில் புத்தாண்டு தினத்தன்று மொத்தம் 2,288,631 பயணிகள் பல்வேறு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

அதில் துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் லைன்கள் 974,416 பயணிகளுக்கு சேவை செய்ததாகவும் டிராம் 56,208 பயணிகளை கையாண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுப் பேருந்துகள் 401,510 பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்வழிப் போக்குவரத்து மூலம் 97,261 பயணிகள் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இ-ஹெய்ல் வாகனங்கள் 167,051 பயணிகளுக்கு சேவை செய்ததாகவும் பகிரப்பட்ட போக்குவரத்து வாகனங்கள் (shared transport vehicles) 1,316 நபர்களால் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவற்றுடன் டாக்சிகளை 590,869 பயணிகள் பயன்படுத்தினர் என RTA கூறியுள்ளது. துபாயில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் புத்தாண்டு கொண்டாட்ட இடங்களுக்குச் செல்வதற்கும் வெளியே செல்வதற்கும் பயணிகளுக்கு இது ஒரு மென்மையான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கியதாக RTA உறுதிப்படுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!