ADVERTISEMENT

கனமழை எதிரொலி.. துபாயில் பீச், பார்க், மார்க்கெட் என அனைத்தும் இன்றிரவு முதல் மூடப்படும்.. அறிவிப்பை வெளியிட்ட துபாய் முனிசிபாலிட்டி..!!

Published: 8 Mar 2024, 7:54 PM |
Updated: 8 Mar 2024, 8:02 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாகவும், குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் எமிரேட்டில் உள்ள அனைத்து கடற்கரைகள், பொது பூங்காக்கள் மற்றும் சந்தைகளை தற்காலிகமாக மூடுவதாக துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், துபாயில் உள்ள அனைத்து கடற்கரைகள் இன்றிரவு வெள்ளிக்கிழமை முதல் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம் பொது பூங்காக்கள் மற்றும் துபாய் முனிசிபாலிட்டிக்கு சொந்தமான சந்தைகள் நாளை சனிக்கிழமை காலை முதல் மூடப்படும் என்றும் துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

துபாய் தவிர அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய எமிரேட்களும், இன்றிரவு முதல் ஞாயிறு வரை எதிர்பார்க்கப்படும் அதிக இடியுடன் கூடிய கனமழை மற்றும் நிலையற்ற வானிலை காரணமாக எமிரேட்களில் உள்ள பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளை தற்காலிகமாக மூடுவதாகவும் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பெய்த கனமழையால் நாட்டின் பல்வேறு இடங்களில் பெரிய சேதங்கள் ஏற்பட்டிருந்தது. தற்போது அதே போன்று மீண்டும் ஒரு கனமழை இன்றிரவு நள்ளிரவு முதல் பெய்யும் என அமீரகத்தின் தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது.

அத்துடன் குடியிருப்பாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், அத்தியாவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel