ADVERTISEMENT

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ‘ஈத் அல் ஃபித்ர்’ விடுமுறையை அறிவித்த சவுதி அரேபியா..!!

Published: 25 Mar 2024, 8:53 AM |
Updated: 25 Mar 2024, 8:55 AM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் உள்ள பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் அல் பித்ர் எனும் நோன்பு பெருநாளுக்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்று இராஜ்ஜியதின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஏப்ரல் 8, திங்கட்கிழமை (ரம்ஜான் 29, 1445) முதல் ஏப்ரல் 11, வியாழக்கிழமை வரை என நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சவூதி அரேபியாவில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் அதிகாரப்பூர்வ வார இறுதி நாட்கள் என்பதால், சவுதி குடியிருப்பாளர்கள் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறையை அனுபவிப்பார்கள் என்றும், அனைவரும் ஏப்ரல் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பணிக்குத் திரும்புவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT

அத்துடன், தொழிலாளர் சட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறை விதி 24 இன் இரண்டாவது எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளதை முதலாளிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மனித வள அமைச்சகம் அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT