அமீரக செய்திகள்

அமீரகத்தின் பல பகுதிகளில் காலை முதல் வெளுத்து வாங்கும் கனமழை.. வீடியோக்களை பகிர்ந்த புயல் மையம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே இடைவிடாத கனமழை, ஆலங்கட்டி மழை என நிலையற்ற வானிலை நாட்டின் பல்வேறு பகுதிகளைத் தாக்கியதைத் தொடர்ந்து, தற்போது அமீரகத்தில் மீண்டும் இன்று முதல் கனமழை பெய்து வருகிறது.

அமீரகத்தின் தேசிய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி, இந்த கனமழையானது வரும் ஞாயிற்றுகிழமை (மார்ச் 10) வரை தொடரும் என்றும், இதனால் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும் உள்துறை அமைச்சகத்தால் எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்பொழுது அமீரகத்தின் பல்வேறு இடங்களிலும் அதிகாலை முதலே இடைவிடாமல் கனமழை பெய்து வருகின்றது. அவற்றில் துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா, அஜ்மான் மற்றும் அபுதாபியின் அல் அய்ன் ஆகிய இடங்களில் பெய்து வரும் மழை காரணமாக சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்துள்ளன.

மேலும் அபுதாபியில் அதிகாலை வானில் தோன்றிய இடி மற்றும் மின்னலின் வீடியோக்களை அமீரகத்தில் வானிலை தொடர்பான தகவல்களை வெளியிடும் புயல் மையம் (storm center) அதன் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளது. எனினும் அபுதாபியின் மையப் பகுதியில் தற்போது வானம் மேகமூட்டதுடன் மட்டுமே காணப்படுகிறது.

நாட்டில் நிலவும் இத்தகைய மோசமான வானிலையை திறம்பட எதிர்கொள்ளவும், வானிலை தொடர்பான ஏதேனும் சம்பவங்களுக்கு விரைந்து பதிலளிக்கவும் காவல்துறை குழுக்கள் தயாராக இருப்பதாக தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) வியாழக்கிழமை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!