ADVERTISEMENT

துபாயில் 2 கிலோ மீட்டருக்கு ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல்.. 20 நிமிடங்கள் தாமதமானதால் வாகன ஓட்டிகள் அவதி..!!

Published: 13 Mar 2024, 11:39 AM |
Updated: 13 Mar 2024, 11:41 AM |
Posted By: admin

துபாயில் உள்ள முக்கிய பகுதியில் திடீரென வாகனம் பழுதடைந்ததன் காரணமாக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருக்கக்கூடிய அல் கூஸ் பகுதியில் இந்த போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை போக்குவரத்து தடைபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயில் இருக்கக்கூடிய லத்தீஃபா பின்ட் ஹம்தான் ஸ்ட்ரீட் அருகே டிரெய்லர் வாகனம் பழுதடைந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் ஏற்பட்ட பம்பர் டூ பம்பர் டிராஃபிக் காரணமாக 20 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

தற்பொழுது இந்த போக்குவரத்தை சீராக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் கூகுள் மேப்ஸ் இப்போது அல் கைல் மாலுக்கு முன்னால் உள்ள சாலையில் 5 நிமிட தாமதத்தைக் காட்டுகின்றது. இதனால் இந்த வழி செல்லும் வாகன ஓட்டிகள் தாமதத்தைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.