ADVERTISEMENT

அமீரகத்தில் இந்த வகை உணவு பொருட்களுக்கு விரைவில் தடை..!! சுற்றுச்சூழல் அமைச்சர் தகவல்..!!

Published: 28 Mar 2024, 4:44 PM |
Updated: 28 Mar 2024, 4:44 PM |
Posted By: admin

உணவு உற்பத்தியாளர்கள் நீண்ட காலத்திற்கு உணவுகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க பயன்படுத்தும் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய் (Hydrogenated Oil) எனும் ஒரு வகை கொழுப்பு வகையை சார்ந்த கலவைக்கு அமீரகத்தில் விரைவில் தடை விதிக்கப்படலாம் என்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

ஃபெடரல் நேஷனல் கவுன்சிலின் (FNC) உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தின் போது, நாட்டின் உணவுத் துறையில் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்களைத் தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ​​காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் அம்னா அல் தஹாக் விவாதித்துள்ளார்.

மேலும், இந்த எண்ணெய்களுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள் குறித்து ஃபெடரல் நேஷனல் கவுன்சிலின் கூட்டத்தில் அவர் வலியுறுத்தியதுடன், அமீரகத்தின் உணவுப் பாதுகாப்புக்கான தேசியக் குழு ஏற்கனவே இந்த வகை கொழுப்பை தடை செய்வதற்கு பகுதியளவு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

பொதுமக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய் மீதான தடை அமலுக்கு வருவதற்கு முன், நாடு முழுவதும் உள்ள உணவு நிறுவனங்களுக்கு சில நிலையான விவரக்குறிப்புகளுக்கு இணங்குவதற்கு அமைச்சகம் சலுகைக் காலத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

அத்துடன் இந்த தடை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டவுடன், அது தொடர்பான விதிமீறல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அமீரகத்தின் உணவுப் பாதுகாப்புக்கான தேசியக் குழு கண்காணிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel