ADVERTISEMENT

ராஸ் அல் கைமாவில் பெய்த மழையால் நிலச்சரிவு.. நெடுஞ்சாலையின் ஒரு பகுதி சேதம்..!!

Published: 9 Mar 2024, 11:32 AM |
Updated: 9 Mar 2024, 11:35 AM |
Posted By: admin

அமீரகத்தில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) தொடங்கி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை வானிலை மோசமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதே போல் அமீரகத்தின் பல பகுதிகளில் இன்று கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது.

ADVERTISEMENT

கனமழை காரணமாக பீச், பார்க் போன்ற முக்கிய பொது இடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மழையினால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத சூழலும் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்த வானிலை காரணமாக அமீரக அமைச்சகமும் ஊழியர்கள் வீட்டிலிருந்த படியே வேலை தனியார் நிறுவனங்களை வலியுறுத்தி அதன்படி பல நிறுவன ஊழியர்கள் தொலைதூர முறையில் இன்று வேலை செய்து வருகின்றனர்.

இப்படி இருக்கக்கூடிய சூழலில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் ராஸ் அல் கைமாவில் உள்ள ஒரு சாலை நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளது. ராஸ் அல் கைமாவில் உள்ள அல் ஷுஹாதா ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த பகுதியை ராசல் கைமா காவல்துறயினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் ஸ்ட்ரீட்டை நோக்கி செல்லும் இந்த சாலையில் மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சாலையின் ஒரு பகுதி கீழே விழுந்ததைக் காட்டும் புகைப்படங்களை காவல்துறையினர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT