ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் பொதுத் துறை மனிதவளங்களுக்கான ஃபெடரல் ஆணையத்தின் (Federal Authority for Government Human Resources – FAHR) படி, ஈத் அல் ஃபித்ர் விடுமுறையானது ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை நீடிக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமீரகத்தின் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி வரும் ஏப்ரல் 8 (திங்கள்கிழமை) முதல் ஏப்ரல் 14 (ஞாயிற்றுக்கிழமை) வரை என ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஏப்ரல் 15, திங்கள்கிழமை முதல் ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடவே, இந்த விடுமுறை நாட்களுக்கு முன்னர் அதாவது ஏப்ரல் 6 மற்றும் 7, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளாக இருப்பதால், மொத்த விடுமுறை நாட்களானது ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 14 வரை என ஒன்பது நாட்களாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
UAE Cabinet has mandated one-week Eid Al Fitr holiday for federal government#UAEGOV pic.twitter.com/kZP5rIibFf
— UAEGOV (@UAEmediaoffice) March 31, 2024
பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் ஈத் அல் ஃபித்ரின் முதல் நாள் ஏப்ரல் 10 அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச வானியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ரை உறுதிப் படுத்த பிறை பார்க்கும் குழு ரமலான் 29 அன்று இரவு கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தில் அரசாங்க ஊழியர்களுக்கான ஈத் அல் ஃபித்ர் விடுமுறை நாட்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை நாட்களையும் அமீரக அரசு இன்னும் சற்று நேரத்தில் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel