ADVERTISEMENT

வெளிநாட்டவர்கள் துபாயில் ஆசிரியராக பணிபுரிய தேவைகள் என்ன..? தகுதி, படிப்பு உள்ளிட்ட முழு தகவல்களும் இங்கே ..!!

Published: 23 Mar 2024, 6:01 PM |
Updated: 23 Mar 2024, 6:31 PM |
Posted By: admin

உலகின் பல நாடுகளிலிருந்தும் எண்ணற்ற வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக துபாய் எமிரேட் தான் அதிகளவிலான வெளிநாட்டவர்கள் வசிக்கும் முக்கிய இருப்பிடமாக உள்ளது. அவ்வாறு, அனைத்து நாட்டினரும் பயன்பெறும் வகையில் அந்தந்த நாடுகளின் பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட பல பள்ளிக்கூடங்களை கொண்டிருக்கும் துபாயில், ஒரு வெளிநாட்டவர் ஆசிரியராக ஆவதற்கு என்னென்ன தேவை என்பது பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை நாட்டில் முதன்மையாக தனியார் (private) மற்றும் பொது (public) என இரண்டு வகையான கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதில் மற்ற நாடுகளின் பாடத்திட்டங்களை அடிப்படையாக கொண்டு இயங்குவது தனியார் பள்ளிகளாகும். எனவே துபாயில் ஆசிரியர் தொழிலில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு, தனியார் பள்ளிகள் ஒரு நல்ல வழியாகும்.

இந்த பள்ளிகள் துபாயில் தனியார் கல்வியை ஒழுங்குபடுத்தும் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையத்தின் (KHDA) கீழ் இயங்குகின்றன. எனவே துபாயில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆசிரியராக வேலையில் சேருவதற்கு அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் வகுத்துள்ள தகுதிகள் முதல் சட்ட அந்தஸ்து வரையிலான வரைமுறைகளை முதலில் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன் விபரங்களை கீழே காணலாம்.

ADVERTISEMENT

செயல்முறை என்ன?

அரசு அல்லது தனியார் பள்ளிகளாக இருந்தாலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் கற்பிக்க ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். துபாயில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான செயல்முறையானது பின்வருமாறு நடைபெறும்.

  1. ஆசிரியராக வேலையில் சேர முதலில் பள்ளிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  2. விண்ணப்பித்த நபரை பள்ளி நிர்வாகம் தேர்ந்தெடுத்ததும், ஆரம்ப நியமனத்திற்கு அப்பள்ளி விண்ணப்பிக்கும்.
  3. பின்னர் அந்த நபர் கல்வியாளர் அனுமதி அமைப்பில் பதிவு செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள்:

ஒரு ஆசிரியர் துபாயில் ஆசிரியர் பணி அனுமதியைப் பெறவும், கற்பித்தலைத் தொடங்கவும், துபாயில் உள்ள பள்ளிகள் ‘இனிஷியல் அப்பாயிண்ட்மென்ட்டுக்கு’ விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பித்த ஆசிரியரின் வகையைப் பொறுத்து இதற்கான ஆவணங்கள் வேறுபடும்.

ADVERTISEMENT

வகுப்பு ஆசிரியர் (Class Teacher): வகுப்பு ஆசிரியர்களாக ஆக விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு, கல்வியில் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டம் (B.Ed) தேவை. விண்ணப்பதாரர்கள் கல்வியில் முதுகலை சான்றிதழ் / டிப்ளமோ அல்லது கல்வியில் முதுகலை பட்டம் (M.Ed) ஆகியவற்றையும் சமர்ப்பிக்கலாம்.

பாட ஆசிரியர் (Subject Teacher): பாட ஆசிரியராக விண்ணப்பிப்பவர்களுக்கு, கற்பிக்கப்படும் பாடத்துடன் தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டத்தின் குறைந்தபட்ச தகுதி தேவை.

இந்த ஆவணங்களின் அசல் இருக்க வேண்டும். அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டம் பெற்றிருந்தால் அந்தச் சான்றிதழை அமீரகத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அந்நாட்டின் தூதரகம் சான்றளிக்க வேண்டும்.

ஒரு ஆசிரியர் துபாயில் ஆரம்ப நியமனத்தைப் பெற்ற பிறகு, அவர்கள் கல்வியாளர் அனுமதி அமைப்பில் (Educator Permit System) பதிவு செய்ய வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் பார்க்க வேண்டிய பல்வேறு வகையான தகுதிகள் உள்ளன. அவை,

பாடத் தகுதி:

வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களாக வகைப்படுத்தப்படும் ஆரம்ப நியமனத்திற்கான தேவைகளே இதற்கும் பொருந்தும். எனினும் குறிப்பிட்ட பாட ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்ட தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் உயர் டிப்ளமோ நிலை அல்லது அதற்கு மேலான தகுதியை கொண்டிருக்க வேண்டும்.

  • கல்வி கற்பித்தல் (கற்பித்தல் முறை மற்றும் நடைமுறை)
  • பாடத்திட்ட மேம்பாடு மற்றும் வடிவமைப்பு (Curriculum development and design)
  • கற்றல் மதிப்பீடு (Learning assessment)
  • வகுப்பறை மேலாண்மை (Classroom management)
  • கல்வி தொழில்நுட்பம் (Educational technology)
  • உளவியல் (அறிவாற்றல், சமூக மற்றும் உடல் வளர்ச்சி)
  • கற்பித்தல் பயிற்சி (Teaching practice)

ஆங்கிலத்தை ஒரு பாடமாக கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள், ஆங்கிலத்தை இரண்டாம் அல்லது வெளிநாட்டு மொழியாக கற்பிக்க கூடுதல் தகுதி பெற்றிருக்க வேண்டும். இதில் CELTA, DELTA, TESOL போன்ற தகுதிகளும் அடங்கும்.

மொழித்திறன்:

  • ஆங்கில பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் IELTS தேர்வில் குறைந்தபட்சம் 7 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • பிற மொழிகளைக் கற்பிக்க ஆங்கிலத்தை பயிற்று மொழியாகப் பயன்படுத்தும் ஆசிரியர்கள் IELTS தேர்வில் குறைந்தபட்சம் 6 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • பிற மொழிகளைக் கற்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் திறமையான அதிகாரிகளால் வழங்கப்பட்ட மொழி புலமைக்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டும்.

சட்ட நிலை: திட்டத்தில் பதிவு செய்யும் ஆசிரியர்கள் செல்லுபடியாகும் UAE குடியிருப்பு விசா மற்றும் பள்ளி ஒப்பந்தம் அல்லது வேலைவாய்ப்பு ஒப்பந்தம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

உடற்தகுதி தேர்வு: ஆசிரியர்கள் உடற்தகுதி குறித்த அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் கற்பிக்க போதுமான தகுதியுடன் இருக்க வேண்டும்.

நல்ல பதிவு (Good Record): விண்ணப்பதாரரின் நல்ல பதிவை நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் காட்ட, அவர்கள் அதை நிரூபிக்கும் சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இவை:

  • UAE போலீஸ் அனுமதி சான்றிதழ்
  • ஆசிரியரின் நல்ல நிலையை உறுதிப்படுத்தும் பள்ளியிலிருந்து கடிதம்
  • ஒரு ஆசிரியர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கவில்லை என்றால், அவர்கள் அந்த ஐந்து ஆண்டுகளில் வசித்த ஒவ்வொரு நாட்டிலிருந்தும் போலீஸ் சான்றிதழை வழங்க வேண்டும்.

கட்டாய மேம்பாட்டுப் படிப்புகள்:

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் தொழில்முறைப் படிப்புகளின் (professional courses) தொகுப்பை முடித்ததற்கான ஆதாரத்தையும் காட்ட வேண்டும். மேலும் இந்த சோதனைகள் KHDA ஆல் நிறுவப்பட்ட வழங்குநர்களால் எடுக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அவை,

  • குழந்தை பாதுகாப்பு மற்றும் அரவணைப்பு
  • மாற்றுத்திறனாளிகளுடன் கையாள்வது
  • பன்முகத்தன்மை
  • தார்மீக கல்வி
  • நிலைத்தன்மை
  • நல்வாழ்வு

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel