ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் இன்று பிறை தென்படாததால் ஏப்ரல் 10ம் தேதி ஈத் அல் ஃபித்ர் என அறிவிப்பு..!!

Published: 8 Apr 2024, 7:13 PM |
Updated: 8 Apr 2024, 7:21 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் இந்த வருடத்திற்கான ரமலான் மாதத்தின் 29 வது நாளான இன்று ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்படாததால், இந்த வருட ரமலான் மாதம் 30 நாட்களாக இருக்கும் என்று சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் வரும் புதன்கிழமை, ஏப்ரல் 10ம் தேதி (ஷவ்வால் மாதம் 1 ம் தேதி) நாடு முழுவதும் ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் என்றும், நாட்டில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஈத் அல் ஃபித்ர் வாழ்த்துக்களையும் சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் தற்போது அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திலும் வெகு விரைவில் ஈத் அல் ஃபித்ர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அமீரகத்திலும் இந்த வருடம் ரமலான் நோன்பு 30 நாட்களாக இருக்க வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel