ADVERTISEMENT

துபாய்: கனமழை அன்று வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து அபராதங்களும் நீக்கம்..

Published: 24 Apr 2024, 9:02 PM |
Updated: 24 Apr 2024, 9:06 PM |
Posted By: admin

துபாயில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி பெய்த மழையின் போது வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என தற்பொழுது காவல்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனை துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார். துபாயின் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் அவர்கள், எமிரேட்டில் கடுமையான வானிலையால் ஏற்பட்ட தாக்கத்தை தணிப்பதற்கான தொடர் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக ஒப்புதல் அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதே போல் ஷார்ஜாவும் கனமழை பெய்த காலங்களில் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வாகன சேதத்திற்காக பெறும் சான்றிதழுக்கான கட்டணத்தையும் ஷார்ஜா நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel