ADVERTISEMENT

ஈத் விடுமுறை: துபாயில் மெட்ரோ, டிராம், பேருந்து இயங்கும் நேரங்களை அறிவித்துள்ள RTA..!!

Published: 5 Apr 2024, 9:23 PM |
Updated: 5 Apr 2024, 9:28 PM |
Posted By: admin

அமீரகத்தில் ஈத் விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் கிட்டத்தட்ட ஒரு வார நீண்ட விடுமுறையின் போது துபாயில் வாகன ஓட்டிகளுக்கு, இலவச பார்க்கிங்கானது அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துபாய் மெட்ரோ மற்றும் டிராம் இயக்க நேரம் நீட்டிக்கப்படும் என்றும் RTA அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மெட்ரோ மற்றும் டிராம் நேரங்கள்

மெட்ரோ

  • ரெட் மற்றும் கிரீன் லைன் இரண்டும் ஏப்ரல் 6, சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும்
  • ஞாயிறு (ஏப்ரல் 7) காலை 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும்
  • திங்கள் முதல் சனி வரை (ஏப்ரல் 8-13) அதிகாலை 5 மணி – நள்ளிரவு 1 மணி வரை இயங்கும்
  • ஞாயிறு (ஏப்ரல் 14) காலை 8 மணி – நள்ளிரவு 12 மணி இயங்கும்

துபாய் டிராம்

ADVERTISEMENT

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும், ஏப்ரல் 14, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் டிராம் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொது பேருந்துகள்

இதேபோல், பொது மற்றும் இன்டர்சிட்டி பேருந்துகளின் இயக்க நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும், பயணிகள் S’hail செயலியை சரிபார்க்குமாறும் RTA அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் வாட்டர் டாக்சி, துபாய் ஃபெர்ரி மற்றும் அப்ரா உள்ளிட்ட கடல் போக்குவரத்துக்கான இயக்க நேரங்களையும் RTA செயலியில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாகன சோதனை

துபாயில் உள்ள சேவை மையங்கள் அனைத்தும் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையின் மூடப்படும். மேலும் ஷவ்வால் 4 அன்று பணிகள் மீண்டும் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் ரமழான் 29 மற்றும் ஷவ்வால் 3 ஆகிய தேதிகளில் மட்டுமே வாகன சோதனை சேவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, உம் ரமூல், தேரா, பர்ஷா, அல் கிபாப் மற்றும் RTA தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள கியோஸ்க்கள் அல்லது ஸ்மார்ட் வாடிக்கையாளர் மையங்கள் தவிர அனைத்து வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களும் விடுமுறை நாட்களில் மூடப்படும் என்றும், மேற்கூறப்பட்ட மையங்கள் வழக்கம் போல் 24/7 செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel