ADVERTISEMENT

ஈத் விடுமுறைக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த அபுதாபி.. டோல் கேட் கட்டணமும் இல்லை..!!

Published: 6 Apr 2024, 2:31 PM |
Updated: 7 Apr 2024, 5:17 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஏப்ரல் 8, திங்கள்கிழமை முதல் ஈத் விடுமுறை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அனைத்து எமிரேட்களிலும் பொது பார்க்கிங் வசதிகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் துபாய், ஷார்ஜா ஆகிய இரு எமிரேட்டுகளும் ஏற்கெனவே குடியிருப்பாளர்களுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்துள்ளன.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து தற்பொழுது அபுதாபியிலும் விடுமுறை நாட்களை இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 8 திங்கள்கிழமை முதல் ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை வரை இலவச பார்க்கிங் அளிக்கப்படும் என்று அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவித்துள்ளது.

மேலும் ஏப்ரல் 15 திங்கட்கிழமை வழக்கம் போல்  வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஏப்ரல் 8 திங்கள் முதல் ஏப்ரல் 14 ஞாயிறு வரை டார்ப் (Darb) டோல் கேட்களில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இவற்றுடன், அபுதாபியில் இயங்கும் பொது பேருந்துகள், அபுதாபி எக்ஸ்பிரஸ் மற்றும் அபுதாபி லிங்க் ஆகிய பொது போக்குவரத்து வசதிகள் தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் எனவும் ITC சார்பில் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT