கடந்த வாரம் ஷார்ஜாவில் பெய்த கனமழைக்குப் பிறகு பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் பல சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது ஷார்ஜா சிட்டியில் தடை செய்யப்பட்ட அனைத்து சாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஷார்ஜாவில் உள்ள உள்ளூர் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், கிங் ஃபைசல் மசூதிக்கு அடுத்துள்ள நிவாரண கூடாரம் இயல்பு நிலைக்கு திரும்பியதை முன்னிட்டு நீக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அனைத்து உத்தியோகபூர்வ நன்கொடை சேனல்களும் சமீபத்தில் அரசாங்க நிறுவனங்களால் அறிவிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மனிதாபிமான வேண்டுகோளுக்கு விரைவாக பதிலளித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடாரத்தில் நன்கொடைகளை வழங்கிய அனைத்து நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முயற்சிகளை குழு பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.