ADVERTISEMENT

UAE மோசமான வானிலை எதிரொலி.. தனியார் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்ட மனிதவள அமைச்சகம்..!!

Published: 15 Apr 2024, 8:26 PM |
Updated: 15 Apr 2024, 9:37 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஏப்ரல் 15) தொடங்கி வரும் ஏப்ரல் 17 வரை நிலையற்ற வானிலை நிலவும் என வானிலை மையம் நேற்றே எச்சரித்திருந்தது. இந்நிலையில் இந்த நிலை நாளை (ஏப்ரல் 16) மற்றும் நாளை மறுநாள் (ஏப்ரல் 17) தீவிரமடையும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை அரசு அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, இந்த மோசமான வானிலையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள், தங்களது வெளிப்புற வேலையினை இடைநிறுத்தி வைக்க முடியாமல் இருக்கும் சூழல்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகமானது (MoHRE) இந்த நிலையற்ற வானிலையின் போது தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு முதலாளிகளையும் நிறுவனங்களையும் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் “ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ள மோசமான வானிலையின் காரணத்தாலும், நாடு முழுவதும் உள்ள தொடர்புடைய அதிகாரிகளின் ஒருங்கிணைப்பிலும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளை உறுதிப்படுத்தவும் தனியார் துறை நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த சமயங்களில் வானிலை மற்றும் வணிக நடவடிக்கைகளில் அவற்றின் தாக்கம் குறித்து ஒவ்வொரு எமிரேட்டிலும் தொடர்புடைய உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட உத்தரவுகளுக்கு நிறுவனங்கள் இணங்க வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் மீண்டும் மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வெள்ளம் ஏற்படும் அபாயம்.. NCM அறிக்கை..!!

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel