ADVERTISEMENT

மே 2ம் தேதி அமீரகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. முன்னெச்சரிக்கை வெளியிட்ட NCM..!!

Published: 28 Apr 2024, 6:02 PM |
Updated: 28 Apr 2024, 6:02 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு நாட்டில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. அமீரகத்தை பொருத்த வரையிலும் இது கோடைகாலத்தின் தொடக்கம் என்பதால் நாட்டில் வெப்பநிலையும் நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், அமீரகத்தில் வரும் மே 2ம் தேதி மீண்டும் ஒரு நிலையற்ற வானிலை நிலவ இருப்பதாக அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) அறிவித்துள்ளது. அதாவது வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வரும் வியாழக்கிழமை குடியிருப்பாளர்கள் நிலையற்ற வானிலை மற்றும் மழையை எதிர்பார்க்க வேண்டும் என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் கூறியுள்ளது.

இதன் விளைவாக மே2 ம் தேதி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை என பல்வேறு தீவிரங்களில் மழை பெய்யும் என்றும், இதனால் நாட்டில் வெப்பநிலையும் கணிசமாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
தற்போதைய வானிலை நிலவரத்தைக் காட்டும் படம்

மேலும் இந்த வெப்பச்சலன மேகங்களின் உருவாக்கம் மற்றும் மாறுபட்ட மழையின் தீவிரம் சில பகுதிகளில், குறிப்பாக குறிப்பிடத்தக்க வெப்பச்சலன செயல்பாடு நிகழும் இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் NCM கணித்துள்ளது.

அத்துடன் பகல் நேரத்தில் மிதமான காற்றுடன் இடியுடன் கூடிய 70% மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும், இரவு நேரத்தில் மழைக்கான வாய்ப்புகள் 50% ஆக குறைவதுடன் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தேசிய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
மே 2ம் தேதி நாட்டில் நிலவவிருக்கும் வானிலை நிலவரம்

அதேபோன்று காற்றின் வேகம் மிதமானதாக இருந்து சற்று அதிகரிக்ககூடும் என்று குறிப்பிட்டதுடன், இது தூசி மற்றும் மணல் வீசுவதற்கு வழிவகுக்கும் மற்றும் கிடைமட்டத் தெரிவுநிலை குறைவதற்கு வழிவகுக்கும் எனவும் NCM தெரிவித்துள்ளது. அதாவது காற்றின் வேகம் மணிக்கு 25 முதல் 35 கிமீ வேகத்தில் இருக்கும் என்றும், சில பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்தை பொருத்தவரை அரேபிய வளைகுடா பகுதியில் கடல் சீற்றம் மிக கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் மிதமானது முதல் கொந்தளிப்பாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மே 2ம் தேதி கனமழை பெய்யும் இடங்களை காட்டும் படம்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel