ADVERTISEMENT

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..!! மே 28 முதல் ஷார்ஜா-துபாய் இடையே எமிரேட்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்..!!

Published: 28 May 2024, 11:00 AM |
Updated: 28 May 2024, 11:00 AM |
Posted By: admin

அமீரகத்தின் மிகவும் பிஸியான மற்றும் முக்கியமான சாலைகளில் ஒன்றான எமிரேட்ஸ் சாலையில் (E611) இன்று மே 28ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி மே 30ம் தேதி வியாழக்கிழமை வரை, ஷார்ஜாவில் அல் புதையா இன்டர்சேஞ்ச் அருகே உள்ள தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த போக்குவரத்து மாற்றம் குறித்து அமீரகத்தின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் (MOEI) பகிர்ந்த வரைபடத்தின்படி, ஷார்ஜாவிலிருந்து துபாயை நோக்கி வரும் எமிரேட்ஸ் சாலையின் வலது பக்க பாதை வரும் வியாழக்கிழமை (மே 30) வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மே 25ம் தேதி அன்று ஷார்ஜாவில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம், எமிரேட்டின் பிரதான சாலைகளான அல் இத்திஹாத் சாலை மற்றும் அல் வஹ்தா சாலை ஆகிய இரண்டு சாலைகளிலும் வேக வரம்புகளைக் குறைப்பதாக அறிவித்தது.

ADVERTISEMENT

அதன்படி, இவ்விரு சாலைகளிலும் அதிகபட்ச வேக வரம்பானது 100 கிமீ வேகத்தில் இருந்து 80 கிமீ வேகமாக குறிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரிலும், அதிகாரிகள் ஷார்ஜா மற்றும் அல் கர்ஹூத் பாலம் இடையே இதேபோன்ற வேகக் குறைப்பை மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT